த்ரிஷாவுடன் ‘லிப் லாக்’... அவரே பகிர்ந்த முத்தக்காட்சி... வைரல் வீடியா!!

 
Trisha

நடிகை த்ரிஷாவுக்கு லிப்கிஸ் கொடுத்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 1999-ம் ஆண்டு மிஸ் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அதே ஆண்டு வெளியான ‘ஜோடி’ படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, அமீர் இயக்கதில் வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Trisha

அதன் பிறகு, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தனக்கென தனி முத்திரை பதித்துள்ள த்ரிஷாவிற்கு வயது 40-ஐ நெருங்கினாலும் இளமை குறையாமல் அதே அழகுடன் இருக்கிறார். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதில் குந்தவை கேரக்டருக்கு அவரை விட்டால் வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார் என்ற அளவுக்கு அவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்தது என்று விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். 

A post shared by Trish (@trishakrishnan)

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் த்ரிஷாவுக்கு 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த நிலையில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஒரு சின்ன குழந்தை தனது போஸ்டருக்கு உதட்டு முத்தம் கொடுக்கும் காட்சியின் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ள நிலையில் ஏராளமான கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகின்றன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

From around the web