கமல்ஹாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்

 
Kamal

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விக்ரம் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2ம் பாகத்தில் கமல் நடித்து வருகிறார். கடந்த ஞாயிறன்று ஐதராபாத் சென்ற கமல்ஹாசன், மூத்த இயக்குநர் கே.விஸ்வநாதன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு சென்னை திரும்பும்போது, உடல் சோர்வாக இருப்பதாக கூறியுள்ளார்.

Kamal

இதனை தொடர்ந்து, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் இது குறித்து அறிக்கை ஒன்றை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதில், லேசான காய்ச்சல் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு நடிகர் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டார் எனவும் தற்போது அவர் நலமாக உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிகிச்சைக்குப் பிறகு கமல்ஹாசன் இன்று காலை வீடு திரும்பியுள்ளார்.

Kamal-Udhaynidhi

தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் இவர், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், உதயநிதி நடிக்கும் படம் என இரண்டு படங்களை தயாரித்து வருகிறார்.

From around the web