இறுதியாக அந்த நாள் வந்துவிட்டது.. தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி!!

 
GVP

சூரரைப் போற்று படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாசஷுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் திரைப்படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்து தேசிய விருது வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கௌரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக சிறந்தப் படம், நடிகர், நடிகை, இயக்கம் என பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது.

GVP

அந்த வகையில் 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டது. பிரஸ் இன்பர்மேஷன் ப்ரூவின் யூடியூப் சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் இது ஒளிபரப்பானது.

இதில் சிறந்த தமிழ் இசையமைப்பாளருக்கான விருதை சூரரைப் போற்று படத்திற்கு இசையமைத்ததற்காக ஜி.வி.பிரகாசஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பின்னணி இசைக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


முதன் முறையாக ஜி.வி.பிரகாஷ் தேசிய விருதை வென்றுள்ளதால், அவருக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  இதனையடுத்து ஜி.வி.பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில், “ஒரு நாள் நீங்கள் அதை பெரிதாக்குவீர்கள். ஒரு நாள் நீ வெல்வாய்… ஒரு நாள் நீ நினைத்தபடி எல்லாம் நடக்கும். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இறுதியாக அந்த நாள் வந்துவிட்டது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

From around the web