பிரபல இயக்குநர் ஜி.எம்.குமார் மருத்துவமனையில் அனுமதி!!

 
GM-Kumar

1986-ம் ஆண்டு ஜி.எம்.குமார் இயக்கத்தில் பிரபு, பல்லவி நடிப்பில் வெளியான ‘அறுவடை நாள்’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, பிக் பாக்கெட், இரும்புப்பூக்கள் மற்றும் உருவம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

GM-Kumar

நடிகை பல்லவியை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜி.எம்.குமார், பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். கேப்டன் மகள், வெயில், மாயாண்டி குடும்பத்தார், அவன் இவன், தாரை தப்பட்டை, சரவணன் இருக்க பயமேன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்புத்திறமை பலராலும் பாராட்டப்பட்டது.

அதுமட்டுமின்றி பாண்டியராஜன் இயக்கியத்தில் வெளியான ‘கன்னிராசி’படத்தின் திரைக்கதையை ஜி.எம்.குமார் எழுதியுள்ளார். மேலும் பிரபுவின் ‘மை டியர் மார்த்தாண்டன்’ படத்தின் கதையையும், கமலின் நடிப்பில் வெளியான ‘காக்கி சட்டை’ படத்தின் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

GM-kumar

இந்நிலையில், நடிகர் ஜி.வி.குமாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை முகலிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

From around the web