வறுமையில் தவித்து வந்த பிரபல நகைச்சுவை நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்!! சோகத்தில் ரசிகர்கள்.!

 
actress-rangammal-patti-passed-away

பிரபல குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையான ரங்கம்மா பாட்டி காலமானார். அவருக்கு வயது 83.

வடிவேலு நடித்த கிமு படத்தில் இடம்பெற்ற காமெடி இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காமெடி காட்சியில் நடித்தவர் ரங்கம்மா பாட்டி.

இவரது சொந்த ஊர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையம். சினிமா மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக சிறு வயதிலேயே மேடை நாடகங்களில் நடித்து சினிமாவிற்கு வந்தார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த விவசாயி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சிவாஜி, ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டோரின் படங்களிலும் குண சித்திரம், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ் அடைந்தவர் இவர். இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பிற மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல் நலம் காரணமாகவும் வயது முதிர்வாலும் சிகிச்சை பெற்று வந்த ரங்கம்மா பாட்டி இன்று மதியம் காலமானார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web