பிரபல நடிகை தீபா தூக்கிட்டு தற்கொலை.! திரையுலகினர் அதிர்ச்சி

 
Powlene-Jessica

பிரபர நடிகை தீபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்தவர் பௌலின் ஜெசிகா (29) சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்தார். ‘அநீதி கதைகள்’ என்ற குறும்படத்தின் மூலம் அறிமுகமான பௌலின், துப்பறிவாளன் படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விதார்த் நடித்த ‘கார்பன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Powlene-jessica

அதன் பிறகு ‘வாய்தா’ படத்தில் கதநாயகியாக நடித்தார். இந்த நிலையில், பௌலின் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

RIP

காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்களை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web