பிரபல நடிகர் சரத் சந்திரன் திடீர் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!!

 
Sarath-chandran

பிரபல இளம் நடிகர் சரத் சந்திரன் மர்மமான முறையில் காலமானார். அவருக்கு வயது 37.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த சரத் சந்திரன், தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்தார். பின்னர் டப்பிங் கலைஞராக சில படங்களில் பணிபுரிந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு அர்ஜூன் பின்னு இயக்கத்தில் வெளியான ‘அனீசியா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சரத் சந்திரன், சூப்பர் ஹிட்டான ‘அங்கமாலி டைரிஸ்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து, 'கூடே', 'ஒரு மெக்சிகன் அபரதா' உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

RIP

கொச்சியில் அப்பா சந்திரன் அம்மா லீலாவுடன் வசித்து வந்தார் சரத் சந்திரன். இவருக்கு ஷ்யாம் சந்திரன் என்ற சகோதரரும் உள்ளார். இந்நிலையில் இன்று சரத் சந்திரன் திடீரென மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

சரத் சந்திரனிடன் திடீர் உயிரிழப்பு மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருடன் நடித்தவர்கள், சமூக வலைதளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் ‘அங்கமாலி டைரிஸ்’ படத்தில் சரத் சந்திரனுடன் நடித்த ஆண்டனி வர்க்கீஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், RIP brother என அவருடைய போட்டோக்களுடன் பதிவிட்டுள்ளார்.

From around the web