பிரபல நடிகர் தீபேஷ் பான் திடீர் மரணம்!! திரையுலகினர் இரங்கல்

 
Deepesh-Bhan

தொலைக்காட்சியில் காமெடி கா கிங் கான், காமெடி கிளப், பூட்வாலா, எப்.ஐ.ஆர்., சேம்ப் மற்றும் சன் யார் சில் மார் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் காமெடி நடிகராக தீபேஷ் பான் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். பிரபல தொலைக்காட்சி தொடரான பாபிஜி கர் பர் ஹெயின் என்ற தொடரிலும் மால்கன் என்ற வேடத்தில் நடித்துள்ளார். 

Deepesh

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தாஹிசர் பகுதியில் உள்ள தனது கட்டிடத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென அவர் மயங்கி சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார். 

கிரிக்கெட் விளையாட வருவதற்கு முன்பு, தீபேஷ் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துள்ளார் என கூறப்படுகிறது. அவரது மறைவை தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தீபேஷ் மறைவுக்கு தொலைக்காட்சி நடிகை கவிதா கவுசிக் வெளியிட்டுள்ள செய்தியில், “41 வயதில் தீபேஷ் பான் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் குடி பழக்கமோ, புகைப்பிடிக்கும் பழக்கமோ இல்லாத நபர். மனைவி மற்றும் ஒரு வயது குழந்தை, பெற்றோர் மற்றும் நம் அனைவரையும் விட்டு விட்டு சென்றுள்ளார்” எனதெரிவித்துள்ளார்.

From around the web