பிரபல மராத்தி நடிகர் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
marathi-actor-arvind-dhanu

மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக பிரபல டிவி நடிகர் திடீரென மரணம் அடைந்தது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மராத்தி தொலைக்காட்சி நடிகர் அரவிந்த் தாணு (47). இவர் 'லகே மஜி லட்கி', 'சுக் மானே நக்கி கே அஸ்தா',' கிரைம் பேட்ரோல்' உட்பட பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார். அத்தோடு ‘ஏக் ஹோதா வால்யா’ என்ற மராத்தி படத்திலும் நடித்துள்ளார்.

actor-arvind-dhanu

ஸ்டார் பிரவா சேனலில் அவர் நடத்திய 'சுக் இஷி காயா ஹுஸ்தா' என்ற தொடர் பிரபலமானது. சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அரவிந்த் தாணு கலந்துகொண்டார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவரது ரத்த அழுத்தம் அதிகரித்தது.

இதையடுத்து அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் உடல்நிலை திடீரென மோசமானது. அவர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

RIP

அரவிந்த் தாணுவின் திடீர் மறைவு அவரது ரசிகர்கள் மத்தியிலும், மராத்தி சின்னத்திரை உலகிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் மறைவுக்கு மராத்தி நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web