பிரபல பாலிவுட் இயக்குநர் ராகேஷ் குமார் மரணம்!! திரையுலகினர் அதிர்ச்சி

 
Rakesh-kumar

பிரபல பாலிவுட் இயக்குநர் ராகேஷ் குமார் காலமானார். அவருக்கு வயது 81.

கே.பி.லாலிடம் உதவியாளராகத் தொடங்கிய ராகேஷ் குமார், 1977-ல் வெளியான ‘கூன் பசினா’ என்று படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, மிஸ்டர். நட்வர்லால், சூர்யவன்ஷி, யாரனா, தோ அவுர் தோ பாஞ்ச் போன்ற படங்களால் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

Rakesh-kumar

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த 10-ம் தேதி காலமானார். மறைந்த ராகேஷ் குமாருக்கு உஷா ராகேஷ் என்ற மனைவியும், லக்ஷய் குமார் சர்மா என்ற மகனும், நேகா ராகேஷ் சர்மா என்ற மகளும் உள்ளனர்.

RIP

இவரது மறைவுக்கு அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராகேஷ் மறைவுக்கு இன்று மாலை அந்தேரியில் பிரார்த்தனை கூட்டம் நடைபெறகிறது.

From around the web