மறுமணம் செய்துகொண்டார் இசையமைப்பாளர் டி.இமான்..! திரையுலகினர் வாழ்த்து!

 
Music-director-Imman-2nd-marriage

இசையமைப்பாளர் டி.இமான் கடந்த 2008-ல் மோனிகா ரிச்சர்ட் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு பிளெசிகா கேத்தி, வெரோனிகா டோரத்தி என்ற 2 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியை விவாகரத்து செய்வதாக நவம்பர் இமான் மாதம் அறிவித்தார். இதையடுத்து அவர் மறுமணம் செய்துகொள்ள இருப்பதாகச் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் டி.இமான் இன்று மறுமணம் செய்து கொண்டுள்ளார். பிரபல கலை இயக்குனர் உபால்டுவின் மகள் எமிலி என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டுள்ளனர். நடிகைகள் சங்கீதா, குட்டி பத்மினி, பாடகர் கிரீஷ் ஆகியோரும் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

இமான் - எமிலி திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

From around the web