மீண்டும் புதுப்பொலிவுடன் CWC.. ஜி.பி.முத்து உள்ளிட்ட புது புது கோமாளிகளுடன் வெளியான ப்ரோமோ!

 
CWC

விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது குறித்து அதிகாரபூர்வ தகவல் தற்போது ப்ரோமோ வீடியோவுடன் வெளியாகி உள்ளது.

மக்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளை கொடுக்ககூடிய தொலைக்காட்சி விஜய் டிவி. சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், நீயா நானா என்று விஜய் டிவி தனது நிகழ்ச்சிகளை பல வருடங்களாக  மக்களுக்கு வெகுவாக கொண்டு சேர்த்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ அடுத்ததாக அனைவரையும் கவர்ந்த ஷோ தான் குக் வித் கோமாளி.

CWC

இந்த ரியாலிட்டி ஷோ, இதுவரை விஜய் டிவியில் 3 சீசன்களாக ஒளிபரப்பாகி வந்தது. சமையல் போட்டியை மிகவும் வித்தியாசமாகவும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் காண்பிக்கும் இந்த ஷோவுக்கு பல ரசிகர்கள் உருவாகினர். முதலாவது சீசனில் பல செலிபிரிட்டிகள் சமைப்பதற்காக போட்டியாளர்களாக இந்த ஷோவில் களமிறக்கப்பட்டனர்.

முன்னதாக அஸ்வின், புகழ், பவித்ரா, சிவாங்கி, குரேஷி, சூப்பர் சிங்கர் பரத், KPY சரத் , மணிமேகலை, சுனிதா, KPY பாலா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பிரபல செப் தாமோதரன் மற்றும் வெங்கடேஷ் பாத் இருவரும் நடுவர்களாக உள்ளனர். அவ்வப்போது மதுரை முத்து, உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வது உண்டு.

CWC

இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா வெற்றி பெற்றார். 2வது சீசனில் கனி வெற்றி பெற்றார். 3வது சீசனில் ரோஷினி ஹரிபிரியன், வித்யூலேகா, ஸ்ருதிகா மற்றும் பலர் சமையல் செய்பவர்களாக கலந்துகொண்டனர். இவர்களுள் ஸ்ருதிகா வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் கலக்கலான 4வது சீசன் ப்ரோமா வெளியாகியுள்ளது. இதில் ஓட்டேரி சிவா, ஜிபி முத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். விஜே ரக்‌ஷன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக தெரிகிறது. தற்போது இந்த ப்ரோமா வைரலாகி வருகிறது.

From around the web