பிக் பாஸ் தமிழ் சீசன் 6 டைட்டில் பட்டம் வென்ற அசீம்!!

 
Azeem Azeem

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் பட்டத்தை அஸிம் தட்டிச்சென்றார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இதுவரைக்கும் இல்லாத வகையில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்படுத்தியது. இந்த சீசனில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தனர். இது இதுவரைக்கும் நடைபெறாதது. அது மட்டுமல்லாமல் இந்த சீசனில் கடைசி நேரத்தில் அதிகமான பிரபலங்களின் சப்போர்ட்டும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு கிடைக்க தொடங்கியது.

Bigboss

அசீமிற்க்கு எதிராக சின்னத்திரை நடிகர்கள் பலர் ஆரம்பத்தில் இருந்தே கருத்து கூறிக் கொண்டிருந்த நிலையில், கடைசி வாரத்தில் விக்ரமன் அசீம், ஷிவின் மூவரும் மட்டுமே இறுதி கட்டத்தை எட்டி இருந்த நிலையில் விக்ரமனுக்கு அரசியல் பிரபலங்கள் சப்போர்ட் கிடைக்க தொடங்கியது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி 6-வது சீசனின் வெற்றியாளர் அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புடன் பேசப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Bigboss

அதன்படி, பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடம் விக்ரமனுக்கும், மூன்றாவது இடம் ஷிவினுக்கு வழங்கப்பட்டது.

From around the web