லயனுக்கும் - டைகருக்கும் பொறந்தவன்... லிகர் ட்ரெய்லர் வெளியீடு!

 
Liger

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் 2011-ம் ஆண்டு வெளியான நுவ்விலா படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் 2017-ம் ஆண்டு வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்து உலகம் முழுக்க ரசிகர்களை கவர்ந்தார்.

அதனைத்தொடர்ந்து வெளியான ‘கீதா கோவிந்தம்’, ‘டாக்ஸி வாலா’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இறுதியாக இவரது நடிப்பில் வெளியான ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக இவரது நடிப்பில்  ‘லிகர்’ படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக உள்ளது. 

Liger

குத்துச்சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடிக்கும் இந்த படத்தை பூரி ஜெகந்நாத் இயக்கி வருகிறார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடிக்கிறார். மேலும் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனங்கள் இந்தப் படத்தை தயாரிக்கின்றன. 

இந்த நிலையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி மிரட்டியுள்ளது. அதாவது போஸ்டரில் இடம்பெற்றுள்ள காட்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா கையில் பூங்கொத்தை மட்டும் வைத்துக்கொண்டு உடம்பில் ஒட்டுத்துணிக் கூட இல்லாமல் நிர்வாணமாக உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.


மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே லயனுக்கும் - டைகருக்கும் பொறந்தவன்... கிராஸ் பரீட் சார் என் பையன் என ரம்யா கிருஷ்ணா பேசும் போது, மாஸாக விஜய் தேவரகொண்டா என்ட்ரி கொடுக்கிறார். பின்னர் எப்படி ஒரு பைட்டராக மாறுகிறார் என்பதையும், அதற்காக இவர் செலுத்தும் கடின உழைப்பு, இவருக்குள் எப்படி காதல் வருகிறது என விறுவிறுப்பு குறையாமல் ட்ரெய்லரில் கூறியுள்ளார் இயக்குனர் பூரி ஜெகநாத்.

From around the web