பணிப்பெண் இல்லத் திருமணத்தில் நடிகர் விக்ரம்!! வைரலாகும் புகைப்படங்கள்

 
Vikram

நடிகர் விக்ரம் தனது வீட்டில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் பணிப்பெண் மேரியின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

1988-ம் ஆண்டு இயக்குநர் பாலசந்தர் இயக்கிய ‘கலாட்டா குடும்பம்’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகர் விக்ரம், தொடர்ந்து 1990-ம் ஆண்டு வெளியான ‘என் காதல் கண்மணி’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் 9 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த ‘சேது’ படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.

vikram

அதனைத் தொடர்ந்து தில், ஜெமினி, தூள், சாமி, காசி, பிதாமகன், அந்நியன், போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் செப். 30-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களின் அன்பிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் நட்சத்திரங்களில் முன்னிலையில் இருப்பவர் சீயான் விக்ரம். ரசிகர்களையே குடும்ப உறவாக கருதும் சீயான் விக்ரம், அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது வழக்கம்.

இந்த நிலையில் சீயான் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். இவர்களது வாரிசான தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது.

vikram

இதனைத் தொடர்ந்து திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற தீபக் வர்ஷினியின் திருமணத்தில் சீயான் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். இதன் போது சீயான் விக்ரமின் ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

From around the web