நடிகர் விஜய்க்கு ரூ. 500 அபராதம்... என்ன காரணம்?

 
Vijay

போக்குவரத்து விதிகளை மீறி தனது காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதாக கூறி நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தோழா, மஹரிஷி உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் வாரிசு வெளியாக உள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார்.

State-Election-Commission-denies-vijay-makkal-iyakkam

விஜய்க்கு தெலுங்கிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இதனால் வாரிசு படத்தை ஆந்திரா, தெலுங்கானாவிலும் கூடுதல் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். இதற்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் எதிப்பு தெரிவித்து உள்ளது. பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்களை வற்புறுத்தி உள்ளது.

இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது, ரசிகர்கள் விஜய் உடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

Fine

இந்நிலையில் தற்போது விஜய்க்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். பனையூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் விஜய் வந்த போது, அவரது காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதால் மோட்டர் வாகன சட்டத்தின் கீழ் அவருக்கு ரூ.500 அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

From around the web