நடிகர் அர்ஜுனின் தாயார் காலமானார்!! திரைபிரபலங்கள் இரங்கல்

 
Arjun

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா இன்று காலமானார். அவளுக்கு வயது 85.

தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு என பல மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வரும் அர்ஜுன் இதுவரை 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மிகச்சிறந்த ஆக்சன் நாயகனாக இன்றுவரை வலம் வந்து கொண்டிருக்கிறார். 

Arjun

ஆக்சன் காட்சிகளில் தனக்கென ஒரு ஸ்டைல் பாணியை வைத்துக்கொண்டு ரசிகர்களை கவர்ந்து வந்ததால் இவரை அனைவரும் ஆக்சன் கிங் என அழைத்து வந்தனர். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் தென்னிந்தியாவில் தனிப் பெயரைப் பெற்றவர் அர்ஜுன்.

கர்நாடக மாநிலம் மைசூரில் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்த இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஓய்வுக்கு பின் வீட்டில் இருந்த லட்சுமி தேவம்மா, சில காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை (ஜூலை 23) காலமானார். 

RIP

தற்போது அவரது உடல் மருத்துவமனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லட்சுமி தேவம்மாவின் மறைவுக்கு கன்னட திரையுலக பிரபலங்கள் பலரும் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

From around the web