8 மாத கர்ப்பம்.. பிரபல மலையாள நடிகை திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Priya

கருத்தமுத்து தொடரில் நடித்து பிரபலமான டாக்டர் பிரியா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 35.

மலையாள சின்னத்திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் டாக்டர் பிரியா. இவர் திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகியுள்ளார். அத்துடன் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் டாக்டராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பமாக இருந்த இவர், மருத்துவமனைக்கு சென்று வழக்கமான பரிசோதனைகள் செய்து வந்தார். 

இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த 8 மாத குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றினர். தற்போது குழந்தை ஐசியூவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

Priya

நடிகை பிரியாவின் மரணம் தொடர்பாக சக நடிகரான கிஷோர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், மலையாள சின்னத்திரை துறையில் மேலும் ஒரு எதிர்பாராத இறப்பு. டாக்டர் பிரியா மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார்.

அவருக்கு வேற எந்த உடல்நல பிரச்சனையும் இல்லை. 35 வயது நிரம்பிய ஒருவர் இவ்வுலகை விட்டு பிரிவதற்கு எப்படி இரங்கல் சொல்ல முடியும். இந்த துயரில் இருந்து அவரது அம்மாவும், கணவனும் எப்படி மீண்டு வருவார்கள். அதற்கான சக்தி அவர்களது மனதில் இருக்கட்டும். பிரியாவின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரியாவின் குழந்தை தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கேரளாவில் சீரியல் நடிகை ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அவரின் இந்த திடீர் முடிவு அனைவர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சோகம் மறைவதற்குள் பிரியா உயிரிழந்திருப்பது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

From around the web