70வது தேசிய விருது அறிவிப்பு.. 4 விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன்!
2022-ம் ஆண்டுக்கான ஒன்றிய ழஅரசின் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் ஒன்றிய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான இந்த விருதுகளில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த ஒலிப்பதிவு என 4 பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றுள்ளது.
2022-க்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ‘காந்தாரா’ படத்துக்காக ரிஷப் ஷெட்டி வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதினை நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) மற்றும் மானசி பரேக் (கட்ச் எக்ஸ்பிரஸ்) படங்களில் நடித்ததற்காகப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
சிறந்த தமிழ் திரைப்படம் - பொன்னியின் செல்வன் 1
சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த ஒளிப்பதிவு - ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த சவுண்ட் டிசைன் - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த நடிகை - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) மற்றும் மானசி பரேக் (கட்ச் எக்ஸ்பிரஸ்)
சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
சிறந்த நடனம் - ஜானி மாஸ்டர் (திருச்சிற்றம்பலம்)
📡LIVE NOW📡
— Ministry of Information and Broadcasting (@MIB_India) August 16, 2024
Announcement of 70th #NationalFilmAwards@AshwiniVaishnaw @Murugan_MoS @PIB_India https://t.co/kBbr3kNFR6
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - காந்தாரா
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அன்பறிவ் (காந்தாரா)
சிறந்த தெலுங்கு திரைப்படம் - கார்த்திகேயா 2
சிறந்த கன்னட திரைப்படம் - கே.ஜி.எப் 2
சிறந்த மலையாள திரைப்படம் - சவுதி வெள்ளைக்கா
சிறந்த திரைக்கதை - ஆனந்த் ஏகார்ஷி (ஆட்டம் - மலையாளம்)
சிறந்த பின்னணி பாடகி - பாம்பே ஜெய்ரஸ்ரீ (சவுதி வெள்ளைக்கா - மலையாளம்)
சிறந்த பின்னணி பாடகர் - ஆர்ஜித் சிங் (பிரம்மஸ்திரா - இந்தி)
சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஸ்ரீபத் (மாளிகாபுரம் - மலையாளம்)