இந்தியாவுக்காக 5 தங்க பதக்கம்.. சர்வதேச நீச்சலில் மாஸ் காட்டிய மாதவன் மகன்!!

 
Madhavan

நடிகர் மாதவன் தனது மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் பதக்கங்களை வாங்கிக் குவித்திருப்பதை புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை நடிகராக இந்தி சீரியல்களில் நடித்து வந்த மாதவன், 2000-ம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தை இயக்கி நடித்து தனது அபார திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

Madhavan

மாதவனின் ஒரே மகன் வேதாந்துக்கு தந்தை வழியில் நடிகர் ஆகும் ஆசை இல்லை. அதற்கு மாதவனும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வேதாந்துக்கு நீச்சல் மீது தான் ஈடுபாடு. மகனின் விருப்பத்தை அறிந்து செயல்படும் தந்தையான மாதவன் விளையாட்டுத் துறையில் மகனை வெற்றியாளராக பார்க்க ரொம்பவே ஹேப்பி ஆகி உள்ளார். சர்வதேச நீச்சல் போட்டிகள், இந்தியளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு தொடர்ந்து பதக்கங்களை மாதவன் மகன் வேதாந்த் குவித்து வருகிறார்.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம், மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 5வது கேலோ இந்தியா யூத் விளையாட்டு (22 வயதுக்குட்பட்ட) போட்டிகளில் வேதாந்த் மாதவன் பதக்கங்களை வென்று பலரையும் திரும்பி பார்க்க வைத்தார். எட்டு இடங்களில் நடைபெற்ற 27 வகை விளையாட்டில் மொத்தம் 6,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று இருந்தனர். இதில் ஆண்களுக்கான 200 மீட்டர் நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மகாராஷ்டிரா அணிக்காக கலந்து கொண்டார்.


இந்த நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி என பல பிரிவுகளில் பதக்கங்கள் வென்றுள்ள வேதாந்த்தின் அடுத்த வெற்றிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர். ஆம், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற Malaysia Invitational Age Group Swimming Championship போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற வேதாந்த் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இவரை திரை, அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

From around the web