30 ஆண்டுகள் நிறைவு... ஆழ்கடலில் பேனர் வைத்த அஜித் ரசிகர்கள்!!

1992-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘பிரேம புஸ்தகம்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் நடிகர் அஜித். 1993-ல் செல்வா இயக்கதில் வெளியான ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது.
அதன் பின்னர் 1995-ல் வெளியான ‘ஆசை’ திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, வில்லன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், அட்டகாசம், வரலாறு, பில்லா, மங்காத்தா, வீரம், விவேகம், வேதாளம், கடைசியாக வெளியான வலிமை படம் வரை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இன்றளவும் திகழ்கிறார்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவு செய்தார். அதனை ரசிகர்கள் பலரும் அன்னதானம், இரத்ததானம், நலத்திட்ட உதவிகள் என பல வகைகளில் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Pondicherry city fans celebrated Ajith sir 30 year anniversary with welcome banner under sea💥
— Telugu Ajith Fans (@TeluguAjithFans) August 5, 2022
#AjithKumar #ajithkumar30 #30yearsofThala pic.twitter.com/j3t09C6e3E
அந்த வகையில், புதுச்சேரி அஜித் ரசிகர்கள், நடிகர் அஜித் குமார் 30 ஆண்டு கால திரைப்பயணத்தை வரவேற்கும் வகையில் 60 அடி ஆழத்தில் ஆழ்கடல் பயிற்சியாளர் உதவியுடன் பேனர் பிடித்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். ஆழ்கடல் பயிற்சியாளர்கள் மூலம் பேனரை பிடித்தப்படி இருக்கும் வகையில் விடியோ, புகைப்படங்களை தற்போது அதிக படியாக பகிரப்பட்டு வருகிறது.