விஜய்யுடன் இணையும் 3 நாயகிகள்.. ஒருவர் த்ரிஷா, இன்னொருவர் சமந்தா, 3வது யார் தெரியுமா? தளபதி 69 அப்டேட்!

 
Thalapathy 69

நடிகர் விஜயின் கடைசி படமான ‘தளபதி 69’ படத்தில் இடம் பெற உள்ள நாயகிகள் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விஜயின் 68வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. சென்னை, ராஜஸ்தான் மற்றும இஸ்தான்புல் ஆகிய இடங்களில் நடைப்பெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு, கேரளாவில் நடைபெற்றது. தற்போது, இந்த படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. 

Goat

‘கோட்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே, அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் தான் கடைசியாக ஒரு படத்தில் நடித்து விட்டு பின்பு முழு நேர அரசியலில் இறங்க உள்ளதாக தெரவித்தார். இவர் கடைசியாக நடிக்க உள்ள அந்த படம்தான், ‘தளபதி 69’. இந்த படத்தை எச்.வினோத் இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது அதில் நடிக்க இருக்கும் நாயகிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

தளபதி 69 படத்தில் நடிக்க மூன்று கதாநாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர், நடிகை த்ரிஷா. ஏற்கனவே விஜய்யுடன் பல படங்களில் சேர்ந்து நடித்த இவர், சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘லியோ’ படத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து, GOAT படத்திலும் ஒரு பாடலுக்கு அவர் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. இவரை, தளபதி 69 படத்திலும் விஜய்க்கு ஜோடியாக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறதாம். 

Mrunal Thakur

அதே போல, விஜய்யுடன் தெறி மற்றும் கத்தி ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த சமந்தாவிடமும் நாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகிறதாம். இவர்கள் இல்லாமல் மூன்றாவதாக ஒரு புது கதாநாயகியும் லிஸ்டில் இருக்கிறார். 

தற்போது தென்னிந்திய அளவில் பெரிய மார்கெட்டை பிடித்திருப்பவர் மிருணாள் தாகூர். இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், தெலுங்கில் வெளியான ‘சீதா ராமம்’ படம் மூலம் ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்து விட்டார். அந்த படம் மட்டுமன்றி சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ‘ஹை நன்னா’ படமும் ஹிட் அடித்தது. இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, மிருணாள் தாகூர் காட்டில் பட மழை பெய்து வருகிறது. இதனால், இவரையும் தளபதி 69 படத்தில் நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. 

From around the web