13 நாள் கோட் படத்தின் வசூல்.. தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு
விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள ‘கோட்’ படத்தின் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
லியோ படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘கோட்’. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.இந்தப் படத்தில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ப்ரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோட் படம் உலகம் முழுவதும் கடந்த 5-ம் தேதி வெளியானது.
இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் சூப்பர் ஹிட் அடித்த இந்த படம், இந்தி வட்டாரத்திலும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் பலர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்தது.
#TheGreatestOfAllTime 🐐💥smashing the Box Office with 413 Crores in just 13 Days🤩🔥#ThalapathyTakeover #MegaBlockbusterGOAT 💣@actorvijay Sir
— AGS Entertainment (@Ags_production) September 18, 2024
A @vp_offl Hero
A @thisisysr Magical #TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram#KalpathiSGanesh… pic.twitter.com/hlvhQNXwdv
தற்போது விஜய் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தும் வகையில் முக்கிய தகவல் ஒன்றை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வெளியான தகவலின்படி, தி கோட் படம் வெளியாகி 13 நாளில் ரூ.413 கோடி வசூலை குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கோட் படத்தின் இந்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.