“ஹலோ நண்பாஸ் மற்றும் நண்பிஸ்” லியோ பட லுக்கில் முதல் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..! சில நிமிடங்களில் லட்சங்களை தாண்டும் ஃபாலோவர்ஸ்!

 
Vijay

இன்ஸ்டாகிராமில் இல்லாமல் இருந்த நடிகர் விஜய் தனது இன்ஸ்டா அக்கவுண்டை தொடங்கியுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரை ‘தளபதி’ என்று அவரது ரசிகர்கள் அன்போடு அழைக்கிறார்கள். 1984-ல் வெளியான ‘வெற்றி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் 18-ம் வயதில் எஸ்ஏசி இயக்கிய ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தார். 

அதனைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’லியோ’ படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் த்ரிஷா ஜோடியாக நடித்து வருகிறார். கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். 

Vijay

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. பான்-இந்தியன் ஆக்‌ஷன் படமான லியோவில் விஜய் கேங்ஸ்டராக நடிக்கிறார். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஒரு குழந்தையின் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் நடிகர் விஜய் அங்கிள் என்னை பார்க்க வாருங்கள் என ஒரு சிறிய குழந்தை கூறி இருந்தது. அந்த வீடியோ நேற்று முழுவதும் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் இன்று அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசினார். அதுவும் பலரால் ரசிக்கப்பட்டது.

A post shared by Vijay (@actorvijay)

இவ்வளவு நாள் இன்ஸ்டாகிராமில் இல்லாமல் இருந்த நடிகர் விஜய் தனது இன்ஸ்டா அக்கவுண்டை தொடங்கியுள்ளார். actorvijay என்ற பெயரில் தொடங்கியுள்ள இவரது அக்கவுண்டை  ரசிகர்கள், திரையுலகம் என பலரும்  ஃபாலோ செய்ய தொடங்கியுள்ளனர். லியோ பட லுக்கில் தனது முதல் போஸ்ட்டை பதிவிட்டுள்ளார். “hello nanbas and nanbis” என்ற கேப்ஷனுடன் அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதற்கு லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்த செய்தி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. அக்கவுண்ட் தொடங்கிய சில நிமிடங்களில் பல லட்சங்களில் ஃபாலோவர்ஸை நெருங்கியுள்ளது.

From around the web