‘எதிர்நீச்சல்’ சீரியலில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்.. லேட்டஸ்ட் அப்டேட்!

 
Ethirneechal

‘எதிர்நீச்சல்’ சீரியலின் புரோமோவில் நடக்க கூடாத சம்பவம் ஏதேனும் நடந்து விட்டதா? என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

கோலங்கள், அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியவர் திருச்செல்வம். தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஆணாதிக்கத்துக்கு எதிராக பெண்கள் தைரியமாக போராட வேண்டும் என்கிற கருத்தை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

படித்த பெண்களை ஆதி குணசேகரன் திருமணம் கொண்டு, அவரை வீட்டு வேலைகள் செய்யச் சொல்லி நான்கு சுவற்றுக்குள் அடைத்தது மட்டுமின்றி, தன்னுடைய தம்பிகளுக்கும், நன்கு படித்த பெண்களை திருமணம் செய்து வைத்து, அவர்களையும் கஷ்டப்படுத்துகிறார்.  இப்படி தன்னுடைய மூன்றாவது தம்பியான சக்திக்கு ஜனனி என்கிற பெண்ணை திருமணம் செய்து வைக்க, குணசேகரனுக்கு எதிராக ஜனனி எப்படி போராடி அதில் வெற்றி பெறுகிறார்? என்கிற விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

Ethirneechal

இந்த நிலையில், ஆதி குணேசகரன் குரலில் ‘ஏம்மா ஏய்..’ என்ற வசனத்திற்கு ஏகபட்ட ரசிகர்கள் குவிந்த நிலையில், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் மிரட்டி வந்த நடிகர் மாரிமுத்து  திடீர் மாரடைப்பால் கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி காலமானார். எதிர்நீச்சல் ரசிகர்களிடையே இவரின் திடீர் மறைவு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சீரியல் மாரிமுத்துவின் மறைவுக்கு பின்னர் TRP-யில் தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதிலும் புதிய குணசேகரனாக நடித்து வரும் வேல ராமமூர்த்தியை பலர், குணசேகரன் கதாபாத்திரத்துடன் இவரை ஒப்பிட்டு பார்க்க முடியவில்லை என்பதை ஓப்பனாகவே கூறி விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தன்னுடைய தம்பிகளுடன் சேர்ந்து... திருவிழாவில் வைத்து எப்படியும் அப்பத்தாவை தீர்த்து கட்டினால் தான் சொத்து நம்ப கைக்கு வரும் என திட்டம் தீட்டுகிறார் குணசேகரன். இந்நிலையில் அப்பத்தா ஏற்பாடு செய்த நிகழ்ச்சி குண்டு வெடிப்புடன் முடிந்தது. அதில் குணசேகரன் ஏற்பாடு செய்த நபர்  இறக்க அனைவருமே அதிர்ச்சியடைந்தனர்.

அதோடு அப்பத்தா தனக்கு சொந்தமான 40 சதவீத சொத்தை, பிரித்து சிலர் பெயரில் எழுதியதால் கடும் கோபத்தில் இருக்கும் குணசேகரன், அவரை சமாதம் செய்வது போல் ஒரு டம்ளரில் பால் கொடுக்க, அதைக் குடித்த அப்பத்தா அப்படியே கட்டிலில் சாய்ந்து விடுகிறார். அவருக்கு என்ன ஆனது என குடும்பமே பதறி விடுகிறது. கதிர் மற்றும் ஞானம் உடனடியாக அப்பத்தாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக காரில் ஏற்றி, எந்த மருத்துவமனைக்கும் கொண்டு செல்லாமல் உள்ளனர். மற்றொரு புறம், ஜனனி, சக்தி, நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி ஆகியோர் அப்பத்தாவை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இடையில் ஜீவானந்தம் போன் செய்து, அப்பத்தா உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் எச்சரித்தார். இதை தொடர்ந்து அப்பத்தா மற்றும் குணசேகரன் எங்கே போனார்கள் என தெரியாமல், கதிர் மற்றும் ஞானம் இருவரும் கண்ணீருடன் வீடு திரும்பிய நிலையில், தற்போது ஜனனி போலீஸ் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை பார்க்க வேண்டும் என கேட்டு, ஏதோ ஒரு இடத்திற்கு சென்று பார்த்து, அங்கேயே கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சி காட்டப்படுகிறது. காணாமல் போன அப்பத்தா, குணசேகரனுக்கு என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

From around the web