யோகிபாபு, ஜி.வி.பிரகாஷ், நெப்போலியன் நடித்த ஹாலிவுட் படம்! டிசம்பர் 13ம் தேதி வெளியீடு!!

அமெரிக்கத் தமிழரின் இயக்கத்தில் யோகிபாபு, ஜி.வி.பிரகாஷ், நெப்போலியன் இணைந்து நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படம் டிசம்பர் 13ம் தேதி 100 திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான நெப்போலியன் கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். மாற்றுத் திறனாளி மகனுக்காக அரசியல், சினிமா வாழ்க்கையைத் துறந்து அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியன் அவ்வப்போது தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்து வந்தார். சிவகார்த்திகேயன், கார்த்தி, கௌதம் கார்த்திக் என இன்றைய நட்சத்திரங்களுடனும் நடித்த நெப்போலியன், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
இது வரையிலும் மூன்று ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நெப்போலியனின் 4 வது ஹாலிவுட் படமான ட்ராப் சிட்டி வரும் 13ம் தேதி அமெரிக்காவில் 100 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை அமெரிக்கத் தமிழரான டெல் கணேசன் தயாரித்து இயக்கியுள்ளார்.
ப்ரண்டன் டி. ஜாக்சன், க்ளிஃப்டன் பவல், டெனிஸ் எல்.ஏ. ஒயிட், யுஹான் ஜோன்ஸ்,கீத் மிடில் ப்ரூக், பிலிசியா மார்கன்,எரிக்கா பிங்கட், ஒமர் குட்டிங், டெல் கணேசன் ஆகியோருடன் நெப்போலியனும் நடித்துள்ளார். நேதன் என்ற வேடத்தில் நெப்போலியன் நடித்திருக்கிறார்.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமாரும் இந்தப் படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்துள்ளதாக IMDB தகவல் தெரிவிக்கிறது. படத்தின் டிரெய்லரில் டாக்டர் வேடத்தில் ஜி.வி.பிரகாஷ் தோன்றும் காட்சியும் உள்ளது. சர்ப்ரைஸாக யோகி பாபு நடனம் ஆடுவது போல் ஒரு காட்சியும் ட்ரெய்லரில் உள்ளது. ஆனால் IMDB யில் வெளியாகியுள்ள ட்ராப் சிட்டி படத்தின் நடிகர்கள் பட்டியலில் யோகிபாபு பெயர் இடம்பெறவில்லை
ட்ராப் சிட்டி படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் தரப்பில் சமீபத்தில் எந்த தகவலும் வெளியாகவில்லை. மலேசியாவில் டிசம்பர் 7ம் தேதி நடக்கவுள்ள இசை நிகழ்ச்சியில் பிஸியாக உள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
நெப்போலியனும் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியுட்டுள்ளார். ட்ராப் சிட்டி படத்தை அமெரிக்கத் தமிழர் டெல் கணேசன் தயாரித்து, இயக்கியுள்ளார்.
https://www.facebook.com/share/r/18Mh6yXCyf/?mibextid=WC7FNe
யோகிபாபு, ஜி.வி. பிரகாஷ் இருவருக்கும் இதுவே முதல் ஹாலிவுட் படம் என்பது குறிப்பிடத் தக்கது.