பொண்டாட்டி பேச்சைக் கேளுங்கப்பா! சொல்றது யார் தெரியுமா?
மனைவியின் பேச்சை கணவன் கேட்டு நடந்தால் இல்லறம் இனிமையாக இருக்கும் என்று பாலிவுட் பிரபல நடிகர் அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் - ஜெயா பச்சனின் மகனும் உலக அழகியும் நடிகையுமானஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சனும் ஹாலிவுட படங்களில் முன்னணி நாயகனாக உள்ளார்.
இவருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் ஓரு மகள் உண்டு. சமீபகாலத்தில் கணவன் மனைவியிடையே பிரச்சனைகள் என்றும் இருவரும் பிரிந்துவிடப்போகிறார்கள் என்றும் தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கிறது.
அதற்கு வலு சேர்க்கும் வகையில் ஐஸ்வர்யா ராயும் மகளுடன் மட்டுமே நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்து கொண்டிருக்கிறார். அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் இணைந்து பொது நிகழ்ச்சிகளில் பார்த்து நீண்டகாலம் ஆகிவிட்டது.
இந்நிலையில், மனைவி பேச்சை கேட்டு நடந்தால் குடும்பம் சிறப்பாக இருக்கும் என்று நிகழ்ச்சி ஒன்றில் அபிஷேக் பச்சன் பேசியுள்ளார். இதன் மூலம் தனக்கும் மனைவிக்கும் எந்தப் பிரச்சனை இல்லை என்பதையும் மறைமுகமாகக் கூறிவிட்டார் அபிஷேக் பச்சன்.