புஷ்பா 2 படத்தால் அல்லு அர்ஜுனுக்கு வந்த சிக்கல்!!
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படம் வெளியாகி உலகமெங்கும் பெரும் வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழிலும் வெளியாகியுள்ள புஷ்பா 2 படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னையிலும் நடைபெற்றது.
இதில் பேசிய அல்லு அர்ஜுன் நான் சென்னை பையன், தமிழில் தான் பேசுவேன், இங்கே வந்தாலே எனக்கு உள்ளுக்குள் பெரும் மகிழ்ச்சி ஏற்படும் என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார். எங்கு செல்கிறோமோ அந்த மண்ணின் மொழியில் பேச வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
தெலங்கானா, ஆந்திராவில் சக்கைப் போடு போடும் புஷ்பா 2 படத்தைக் காண தியேட்டரில் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றனர். ஐதராபாத் தியேட்டர் ஒன்றில் புஷ்பா படத்தைப் பார்க்கச் சென்ற ரசிகர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ள நிகழ்வு தெலுங்கப்பட உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 9 வயது மகனையும் அழைத்துச் சென்றுள்ளார் அந்த ரசிகர். மகனும் படுகாயம் அடைந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தியேட்டர் நிர்வாகம், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் மீது ஐதராபாத் போலீசார் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.