பிரபல இயக்குநர் வீட்டில் சோகம்.. பிரபலங்கள் இரங்கல்!

 
Cheran

பிரபல இயக்குநர் சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 84.

1997-ல் வெளியான ‘பாரதி கண்ணம்மா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் சேரன். தொடர்ந்து பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, பாணவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் 2002-ல் வெளியான ‘சொல்ல மறந்த கதை’ படத்தின் மூலம் கதைநாயகனாகவும் அறிமுகமானார். அதன்பின் பல படங்களில் நடித்துள்ளார்.

சேரன் கடைசியாக 2019-ம் ஆண்டு வெளியான ‘திருமணம்’ படத்தை இயக்கியிருந்தார். அவரே நடித்தும் இருந்த இப்படத்தில் தம்பிராமையா, சுகன்யா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக அவர் எந்தப் படத்தையும் இயக்கவில்லை.

Cheran

இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரபரப்பாக பேசப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. தற்போது கன்னடத்தில் கிச்சா சுதீப் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்தை சேரன் இயக்கவிருக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவிருக்கிறது.

இந்த நிலையில், இயக்குநர் சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் இன்று (நவம்பர் 16) அதிகாலை 6.30 மணிக்கு அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டத்தில் உள்ள பழையூர்பட்டியில் இருக்கும் அவரது வீட்டில் காலமானார். அவர் சினிமா ஆப்பரேட்டராக பணிபுரிந்தவர். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

RIP

அவரது இறுதி சடங்குகள் பழையூர்பட்டியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. சேரனின் தந்தை மறைவையொட்டி பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சேரனுக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.

From around the web