நாளை திருமணம்.. காதலனை அறிமுகம் செய்த ராதா மகள்.. ரசிகர்கள் வாழ்த்து!

 
Karthika Nair

நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில் தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை நடிகை கார்த்திகா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

1980-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதா. சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யாராஜ், பிரபு, மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ் என தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

KArthika

நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா நாயர், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘கோ’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனை அடுத்து அவர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘அன்னக்கொடி’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’புறம்போக்கு என்ற பொதுவுடமை’ ஆகிய படங்களில் நடித்தார். ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் கார்த்திகாவுக்கு எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அதிகாரபூர்வமாக நடிகை கார்த்திகாவே அறிவித்தும் இருந்தார். இதையடுத்து, நாளை (நவம்பர் 16) திருவனந்தபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளது. திருமண நிச்சயம் ஆனதில் இருந்து மாப்பிள்ளையின் புகைப்படத்தை வெளிப்படுத்தாமல் இருந்த கார்த்திகா தற்போது மாப்பிள்ளை ரோஹித் மேனனுடன் எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

A post shared by Karthika Nair (@karthika_nair9)

அதில், “உன்னை சந்தித்தது கனவு போன்று இருக்கிறது. அதன்பிறகு உன்னுடன் நான் காதலில் விழுந்தது மேஜிக் போல நடந்தது. இனிமேல் நாம் இருவரும் எப்போதும் சேர்ந்து வாழ்வதற்கான தொடக்கத்தின் கவுண்டவுன் இப்போதிருந்து தொடங்குகிறது” எனக் காதலில் உருகியுள்ளார். திரையுலகைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் இந்த காதல் ஜோடிக்குத் தங்களது திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

From around the web