தமன்னா - விஜய் வர்மா டேட்டிங் ஓவர்.. திருமணம் எப்போது தெரியுமா?
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளான தமன்னா - விஜய் வர்மா ஜோடி எப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறது என்பது குறித்தானத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. 2006-ல் வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தமன்னா அறிமுகமானார். தனது முதல் படத்தில் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஓரளவுக்கு ஈர்த்த தமன்னா, தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து வெளியானாலும் ரசிகர்களின் கவனத்தை பெருமளவு ஈர்க்க தவறிவிட்டது. அதன் பின்னர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘படிக்காதவன்’ படத்தில் தனுசுக்கு ஜோடியாக தமன்னா களம் இறங்க இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட்டானது.
குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த தமன்னா கார்த்தி நடித்த சிறுத்தை திரைப்படத்தில் கவர்ச்சி காட்டி நடிக்க ரசிகர்கள் கூட்டம் மளமளவென பெறுகத் தொடங்கியது. அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் அங்கும் இங்கும் கவர்ச்சி காட்டி நடிக்க தொடங்கிய தமன்னா, தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகைகளில் ஒருவராகிவிட்டார்.
அஜித், விஜய், கார்த்தி என்று டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிக்க தொடங்கிய தமன்னா, தற்போது இந்தி சினிமாவில் செம பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தமன்னா நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமன்னா முக்கிய வேடத்தில் நடித்துள்ள லஸ்ட் ஸ்டோரிஸ் 2 பட டீசர் வெளியாகியிருந்தது.
இவரும் நடிகர் விஜய் வர்மாவும் காதல் பறவைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இவர்களது திருமணம் குறித்தானக் கேள்விகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது. இதுகுறித்தான கேள்விக்கு நடிகை தமன்னா, ‘இப்போதைக்குத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் சுத்தமாக இல்லை’ எனக் கூறியிருந்தார்.
ஆனால், 33 வயதாகக்கூடிய தமன்னா தற்போது பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், இவரது நிச்சயதார்த்தம் டிசம்பர் இறுதி வாரம் அல்லது ஜனவரியில் நடக்கும் எனவும் பிப்ரவரி மாதம் திருமணம் எனவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து விரைவில் தமன்னா- விஜய் வர்மா ஜோடி அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.