தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்' படத்தின் புதிய அப்டேட்..!

'கேப்டன் மில்லர்' படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
வாத்தி படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யுப் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்.
1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.
இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
You cannot win when im alive .. and today is not my time to die …
— G.V.Prakash Kumar (@gvprakash) November 14, 2023
ITS YOURS 🔥🔥🔥
இந்த வரண்ட மண்ணும் குருதி குடிக்கும் … புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும் ….
நாந்தாண்டா நீதி ….
நாந்தாண்டா நீதி ….
Killer killer captain miller …..
Killer killer captain miller …..… pic.twitter.com/Xi8QnVff2n
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.