சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பொற்காலம்

 
Sukran

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வாகும். இவற்றை கிரக பெயர்ச்சிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும், ஆனால் இதனால் சில ராசிக்காரர்களுக்கு சுப விளைவுகளையும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கலையும் ஏற்படுத்தக் கூடும். அதேபோல் திருமண வாழ்க்கை, செல்வச் செழிப்பு, புகழ், கலை, அன்பு, போன்றவற்றை அள்ளித் தரும் சுக்கிரன் பகவான் ரிஷபம் மற்றும் துலா ராசியின் அதிபதி ஆவார். அதேபோல் மீன ராசியில் உச்ச நிலையில் இருக்கும் சுக்கிர பகவான் கன்னி ராசியில் நீச்ச நிலையில் இருப்பார்.

இந்த நிலையில், ஜூலை மாதத்தில் சுக்கிரன் 2 முறை தனது ராசியை மாற்றுவார். ஜூலை 7-ம் தேதி அவர் மிதுன ராசியில் இருந்து விலகி கடக ராசியில் பெயர்ச்சி ஆவார். அதன் பிறகு ஜூலை 31, 2024 புதன்கிழமை அன்று மதியம் 2.40 மணிக்கு அவர் கடக ராசியில் இருந்து விலகி சூரியனின் ராசியான சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆவார்.

சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு முன்னேறும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Astrology

ரிஷபம்:

கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிக நன்மை பயக்கும். உங்கள் தொழில், வியாபாரம் மற்றும் வேலையில் மிகவும் சாதகமான தாக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. செல்வம் பெருகும். எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கல்வியுடன் தொடர்புடையவர்களின் வருமானமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் தரம் உயரும். வாழ்வில் ஆடம்பரப் பொருட்களும் சுகபோகங்களும் பெருகும். சொகுசு வாழ்க்கை வாழ்வீர்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் விரும்பிய ஊருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும். 

விருச்சிகம்:

சிம்மத்தில் சுக்கிரன் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். பண வரவு அதிகமாகும். இதனால் நிதி நெருக்கடி தீரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பல வழிகளில் வருமானம் கிடைக்கும். வாழ்வில் சுபிட்சம் ஏற்படும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். மாணவர்களின் செயல்திட்டங்கள் பாராட்டப்பட்டு அவர்களின் தொழில் பலம் பெறும். சமூக மற்றும் குடும்ப உறவுகள் வலுப்பெறும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

Sukran

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு கடக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அள்ளித் தரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். புதிய வணிகத்தை தொடங்க இது நல்ல நேரமாக பார்க்கப்படுகின்றது. பொருளாதார நிலை முன்பை விட வலுவடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. படிப்பு மற்றும் கற்பித்தல் தொடர்பான துறகளில் உள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பணத்தை சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். 

From around the web