குருவின் உச்ச ஆட்டம்: ராஜயோகம் பெறும் ராசிகள்
வேத ஜோதிடத்தில் குரு, முழுமையான சுப கிரகமாகக் கருதப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் குரு பெயர்ச்சியால், மகிழ்ச்சி, செழிப்பு, திருமணம், குழந்தைப் பேறு ஆகியவை உண்டாகும். மே 1 அன்று, குரு பகவான் மேஷம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி ஆனார். குரு பெயர்ச்சி 2024 ஆண்டு முழுவதும் ரிஷபம் ராசியில் சஞ்சரிப்பார். இதைத் தவிர, குரு ராசியிலேயே உள்ள வெவ்வேறு நட்சத்திரத்தில் பிரவேசிப்பார். சில நாட்களுக்கு முன்பு, குரு பகவான், கிருத்திகை நட்சத்திரத்தில் இருந்து ரோகிணி நட்சத்திரத்திற்கு பிரவேசித்துள்ளார்.
குருவுக்கு பிடித்தமான கிரகங்களில் ஒன்றா சந்திரனின் நட்சத்திரம் ரோகினி, குரு உச்சம் அடையும் ராசியான கடக ராசி சந்திரன் ஆட்சி செய்யும் ராசி. எனவே, ரோகிணியில் சஞ்சரிக்கும் குரு பகவான்,குரு பெயர்ச்சி 2024 பலன்கள் கொஞ்சம் சிறப்பாக மாறும். ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவானின் சஞ்சாரம், சில ராசிக்காரர்களுக்கு அதிக பலன்களைத் தரும். நீண்ட நாட்களாக முடிவடையாமல் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். இதனுடன் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குரு பெயர்ச்சி 2024 ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்: இந்த பெயர்ச்சி மேஷ ராசிகளுக்கு முன்னேற்றத்தை தரும். வீட்டில் அமைதி நிலவும். மன அழுத்தம் குறையும். பொருளாதார நிலை மேம்படும், செல்வம் பெருகும். புதிய வீடு வாங்கலாம். பல்வேறு வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
ரிஷபம்: ரோகிணி நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி ரிஷப ராசிகளுக்கு தொழிலில் சிறப்பான பலனைத் தரும். இளைய உடன்பிறப்புகளுடன் உறவு மேம்படும். மகிழ்ச்சியுடன் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும், படிப்பில் சிறப்பாக செயல்படுவீர்கள்.
மிதுனம்: ரோகிணி நட்சத்திரத்தில் குரு நுழைந்துள்ளது மிதுன ராசிக்காரர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும். நிதி ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தால் மிகவும் நல்ல பலன்களைத் தருவதாகக் கருதப்படுகிறது. தொழில் வாழ்க்கையில் அதிக நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு புதிய நம்பிக்கை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி ஏற்படும். சுப கிரகத்தின் தாக்கம் அதிக ஆற்றலை தரும். நல்ல தோற்றத்தையும், நல்ல உணர்வையும் தரும். வாழ்க்கை முறையை மாற்ற முயற்சித்தால், இதுவே சரியான நேரம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றத்தை தரும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். புது வீடு வாங்கலாம். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு இட மாற்றம் ஏற்படலாம்.
கன்னி: கன்னி ராசிக்காரர்கள் கடினயாக உழைப்பார்கள். கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் நல்ல வாய்ப்புகளை பெறலாம் . லட்சியங்களை அடைய உதவும். புதிய இலக்குகளை அமைக்கவும் அல்லது தொழில் மாற்றத்தைப் பற்றி சிந்திக்கவும் சிறந்த நேரம். வேலையில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கலாம்.
துலாம்: இந்த குரு பெயர்ச்சி தொழிலில் வளர்ச்சி, பதவி உயர்வு மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்தை தரும். புதிய பொறுப்புகளை ஏற்கலாம், பதவி உயர்வு அல்லது புதிய தொழிலைத் தொடங்கலாம். துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த அனுபவத்தை தரும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு, இந்தப் பெயர்ச்சி புதிய வாய்ப்புகளைத் தரும். உயர்கல்வி பெறுவதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலை மேம்படுத்தலாம். செல்வம் பெருகும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு, இந்தப் பெயர்ச்சி நிதி ரீதியாக உதவும். லாட்டரி வெற்றியால் எதிர்பாராத பண வரவு ஏற்படும். வாழ்க்கையில் பெரிய வெற்றியைப் பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மகரம்: இந்த குரு பெயர்ச்சி மகர ராசிக்காரர்களின் வாழ்வில் பல மாற்றங்களை கொண்டு வரும். புதிய உறவுகளை உருவாக்கலாம். அன்பு, நம்பிக்கை, மற்றும் புரிதலை வலுப்படுத்தும். புத்திசாலித்தனமாக செயல்படுங்கள்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி முன்னேற்றத்தை தரும். உணவுப் பழக்கத்தை மாற்றவும். ஆரோக்கியத்தை மேம்படுத்தவும். மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். சிறந்த பணிச்சூழலுக்கு வழிவகுக்கும்.
மீனம்: குரு பெயர்ச்சி மீன ராசிகளின் வாழ்க்கையில் நல்ல பலனைத் தரும். ஆக்கப்பூர்வமான பணிகளில் வெற்றி கிடைக்கும். திருமண வாழக்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான வாய்ப்புகள் உள்ளன.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. A1TAMILNEWS.COM இதற்கு பொறுப்பேற்காது.