’96 விமர்சனம்

நடிகர்கள்: விஜய் சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ், ஆதித்யா, கௌரி ஒளிப்பதிவு: சண்முகசுந்தரம் இசை: கோவிந்த் வஸந்தா தயாரிப்பு: நந்தகோபால் இயக்கம்: சி பிரேம்குமார் தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக வெரைட்டியான படங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. அதில் ஒன்று ’96. முழுக்க முழுக்க காதலும் மென்மையான உணர்ச்சிப்பூர்வமான, கவித்துவமான காட்சிகளும் நிறைந்த படம் இது. விஜய் சேதுபதியும் திரிஷாவும் பத்தாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே காதலர்கள். ஒருவருக்கொருவர் காதலைச் சொல்லிக்கொள்ளாத காதலர்கள். பத்தாம் வகுப்பு முடிந்து பதினொன்றாம்
 

’96 விமர்சனம்

டிகர்கள்: விஜய் சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ், ஆதித்யா, கௌரி

ஒளிப்பதிவு: சண்முகசுந்தரம்

இசை: கோவிந்த் வஸந்தா

தயாரிப்பு: நந்தகோபால்

இயக்கம்: சி பிரேம்குமார்

தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக வெரைட்டியான படங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. அதில் ஒன்று ’96. முழுக்க முழுக்க காதலும் மென்மையான உணர்ச்சிப்பூர்வமான, கவித்துவமான காட்சிகளும் நிறைந்த படம் இது.

விஜய் சேதுபதியும் திரிஷாவும் பத்தாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே காதலர்கள்.
ஒருவருக்கொருவர் காதலைச் சொல்லிக்கொள்ளாத காதலர்கள். பத்தாம் வகுப்பு முடிந்து
பதினொன்றாம் வகுப்பு தொடங்கும் போது விஜய் சேதுபதி மாயமாகிவிடுகிறார். மிகுந்த
ஏமாற்றத்துடன் படிப்பை தொடர்கிறார் திரிஷா. 22 ஆண்டுகளுக்குப் பிறகு பழைய மாணவர் சந்திப்பு ஒன்றில் இருவரும் சந்திக்கிறார்கள். அந்த சந்திப்பு நடக்கும் ஒரு மழை நாள் இரவில் இருவருக்குள்ளும் என்ன நிகழ்கிறது, காதலைப் பரிமாறிக்கொள்கிறார்களா, ஒன்று சேர்ந்தார்களா என்பதுதான் மீதி ஒன்றரை மணி நேரக் கதை.

’96 விமர்சனம்

தொன்னூறுகளில் பள்ளிப் பருவத்திலிருந்து தொடங்குகிறது கதை. அந்தக் காலகட்டத்தை கண்முன் நிறுத்த ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர். அதற்கு ரொம்பவே உதவி இருக்கிறது இளையராஜாவின் இசையும் ஜானகியின் குரலும். அந்தப் பாடல்களையும் ஜானகி அம்மாவின் குரலையும் ஒவ்வொரு முறை கேட்க்கும் போதும் உடல் சிலிர்க்கிறது.

பள்ளிப் பருவ நாட்களை ஒவ்வொருவரையும் நினைத்துப் பார்க்க வைக்கின்றன காட்சிகள் என்பது உண்மைதான். ஆனால் அந்தக் காட்சிகளில் பெரிய சுவாரஸ்யம் எதுவும் இல்லை என்பதும் உண்மை.

அதே போல விஜய் சேதுபதி திரிஷா இருவரும் அந்த இரவு முழுவதும் செய்யும் எதுவுமே மனதில் ஒட்டவில்லை. கொஞ்சம் செயற்கைத்தனமாகவும் உள்ளது. விஜய் சேதுபதியின் கூச்ச சுபாவத்தை பார்க்கும் போதெல்லாம் ‘அட பேசி தொலைய்யா’ என கத்த வைக்கிறது பார்வையாளர்களை.

’96 விமர்சனம்

திரிஷாவின் தோற்றம் நடிப்பு எதிலுமே சுவாரஸ்யம் இல்லை, செயற்கைத்தனமாகவும் உள்ளது. விஜய் சேதுபதி – திரிஷாவை விட அவர்களது இளவயது தோற்றத்தில் வரும் ஆதித்யாவும் கௌரியும் ஈர்க்கிறார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் திரிஷாவையும் விஜய் சேதுபதியையும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தம். நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

ரொம்ப நாளைக்குப் பிறகு ஜனகராஜைப் பார்க்க முடிகிறது.

அதேபோல கல்லூரியில் படிக்கும் காதலியைத் தேடி வரும் இளவயது விஜய் சேதுபதி, அவள் பார்க்க விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டபிறகும் அவளுக்கு கல்யாணம் ஆகும் வரை பின் தொடர்ந்ததாக ஒரு இடத்தில் தெரிவிக்கிறார். அத்தனை ஆண்டுகள் பின்தொடர்ந்தவருக்கு அவளது உண்மையான மனசு என்ன, அந்த மனசுக்குள்தான் இருக்கிறோமா இல்லையா என்பது கூடவா தெரியாமலா போகும்?

ஒரு கவிதையின் அழுத்தமான இறுதி வரிகள் போல கிளமேக்ஸை அமைத்திருப்பது
பாராட்டுக்குரியது. அந்த ‘யமுனை ஆற்றிலே’ பாடலை திரிஷா எப்போது பாடுவாரோ என
எதிர்ப்பார்க்க வைத்து யாரும் எதிர்பாராத ஒரு மின்வெட்டு நேரத்தில் பாடவைத்திருப்பது ஒரு இனிய அதிர்ச்சி.

ஒளிப்பதிவு நம்மை அந்தக் காலகட்டதுக்கே அழைத்து செல்கிறது. கோவிந்தின் பின்னணி இசை இதமான உணர்வைத் தருகிறது. முதல் படத்திலேயே ஒரு பக்குவமான காதல் கதையை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் பிரேம் குமார். அதை இன்னும் கூட சுவாரஸ்யமாக சொல்லியிருக்கலாம்!

Rating : 3.0/5.0

 

From around the web