இந்திய விமானப்படையின் 87 ஆவது பிறந்த நாள்! தோற்றமும் வளர்ச்சியும்…

டெல்லி: 1932ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி இதே நாளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்து விமானப்படையின் துணை அமைப்பாக உருவாக்கப்பட்டது ராயல் இந்தியன் ஏர்ஃபோர்ஸ். 1950ம் ஆண்டு இந்தியா குடியரசான பின் விமானப்படையின் பெயர் இந்தியன் ஏர்ஃபோர்ஸ் என மாற்றப்பட்டது. 87 ஆண்டு வரலாற்றில் இந்திய விமானப்படை எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளது. 2ம் உலகப் போரில் ஜப்பானிய ராணுவம் பர்மாவில் ஊருடுருவதை தடுப்பதில் இருந்து தொடங்குகிறது இந்திய விமானப்படையின் வெற்றி்க்கதை. பாகிஸ்தானுடன் 4 போர்கள், சீனாவுடன்
 

இந்திய விமானப்படையின் 87 ஆவது பிறந்த நாள்! தோற்றமும் வளர்ச்சியும்…

டெல்லி: 1932ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி இதே நாளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்து விமானப்படையின் துணை அமைப்பாக உருவாக்கப்பட்டது ராயல் இந்தியன் ஏர்ஃபோர்ஸ்.

1950ம் ஆண்டு இந்தியா குடியரசான பின் விமானப்படையின் பெயர் இந்தியன் ஏர்ஃபோர்ஸ் என மாற்றப்பட்டது. 87 ஆண்டு வரலாற்றில் இந்திய விமானப்படை எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளது. 2ம் உலகப் போரில் ஜப்பானிய ராணுவம் பர்மாவில் ஊருடுருவதை தடுப்பதில் இருந்து தொடங்குகிறது இந்திய விமானப்படையின் வெற்றி்க்கதை.

பாகிஸ்தானுடன் 4 போர்கள், சீனாவுடன் ஒரு போர் என 5 பெரிய போர்களை விமானப்படை எதிர்கொண்டுள்ளது. இதில் 1971ல் பாகிஸ்தானிலிருந்து பிரித்து வங்கதேசத்தை உருவாக்குவதில் இந்திய விமானப்படையின் பங்கு மிக முக்கியமானது. ஆபரேஷன் விஜய், ஆபரேஷன் மேக்தூத், ஆபரேஷன் பூமாலை என குறிப்பிட்ட பணிகளையும் வெற்றிகரமாக முடிந்துள்ளது நமது வான் படை.

1987ல் ஆபரேஷன் பூமாலை என்ற பெயரில் இலங்கை தமிழ் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அந்நாட்டு அரசின் கண்களில் மண்ணைத் தூவி கொண்டு சேர்த்தது விமானப்படையின் மைல் கல்களில் ஒன்றாக உள்ளது. போர்கள், சண்டைகள் மட்டுமல்ல, புயல், காட்டுத் தீ போன்ற பேரிடர் காலங்களிலும் விமானப்படையின் சேவை குறிப்பிடத்தக்கது.

1998ல் குஜராத்தை தாக்கிய புயல், 2007ல் சுனாமி ஆகிய காலங்களில் விமான படை விறுவிறுப்பாக பணியாற்றி ஏராளமான மக்களின் உயிர்களை காத்ததுடன் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் கொண்டு சேர்த்து. சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள், அதிகாரிகளுடன் உலகின் முன்னணி விமானப்படைகளில் ஒன்றாக இந்திய விமானப்படை திகழ்கிறது.

சுக்கோய், மிக், மிராஜ் என அதிநவீன விமானங்களை கொண்ட விமானப்படையில் மேலும் ஒரு மகுடமாக ரஃபேல் போர் விமானங்களும் சேர உள்ளன.

– வணக்கம் இந்தியா

From around the web