வயிற்றிலிருந்த 759 நீர்க்கட்டிகள்! மருத்துவர்கள் சாதனை.

சென்னையில் இளம்பெண்ணின் வயிற்றிலிருந்த 759 நீர்க்கட்டிகளை ஒரே அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த 29 வயதான பெண், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடுமையான வயிற்று வலியால் அவதியடைந்து வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, வயிற்றில் பெரிடோனியல் ஹைடடிட் எனப்படும் நீர்கட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது. ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 759 நீர்க்கட்டிகள் இருந்ததை கண்டறிந்த மருத்துவர்கள், ஒரே அறுவை சிகிச்சையில் அனைத்து நீர்கட்டிகளையும் அகற்றி சாதனை
 

வயிற்றிலிருந்த 759 நீர்க்கட்டிகள்!  மருத்துவர்கள் சாதனை.சென்னையில் இளம்பெண்ணின் வயிற்றிலிருந்த 759 நீர்க்கட்டிகளை ஒரே அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த 29 வயதான பெண், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடுமையான வயிற்று வலியால் அவதியடைந்து வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, வயிற்றில் பெரிடோனியல் ஹைடடிட் எனப்படும் நீர்கட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது. ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 759 நீர்க்கட்டிகள் இருந்ததை கண்டறிந்த மருத்துவர்கள், ஒரே அறுவை சிகிச்சையில் அனைத்து நீர்கட்டிகளையும் அகற்றி சாதனை படைத்தனர்.

வயிற்றில் நீர்கட்டிகள் வளரும் போது, எந்தவிதமான அறிகுறிகளும் நோயாளிகளுக்கு தெரியவராது என்கிறார்கள் மருத்துவர்கள். நீர்கட்டிகள் வளர்ந்த பிறகு திடீரென கடுமையாக வயிற்று வலி ஏற்படும் எனவும், வயிற்றுக்குள்ளேயே நீர்கட்டிகள் வெடித்து விட்டால் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

https://www.A1TamilNews.com

From around the web