28 வருடங்களில் 53 முறை டிரான்ஸ்பர்! நேர்மையால் பந்தாடப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி!

தமிழகம் முழுவதுமே பல அரசு அதிகாரிகள் சரியாக பணியைச் செய்யாமல் கவுன்சிலர் பதவியில் ஆரம்பித்து அனைவருக்குமே சலாம் போட்டு லஞ்சம் வாங்கிக் கொண்டு கடமையை காற்றில் பறக்க விடுகிறார்கள் என்கிற எண்ணம் பொதுமக்களிடையே இருந்து வருகிறது. இந்நிலையில், ஹரியானாவைச் சேர்ந்த சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா கடந்த 28 வருடங்களில், 53வது முறையாக, நேர்மையாக பணியாற்றியதற்கு பரிசாக இட மாறுதலுக்கு ஆளாகியிருக்கிறார். ஹரியானாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலராக பணியாற்றிய வந்த இவர்
 

28 வருடங்களில் 53 முறை டிரான்ஸ்பர்! நேர்மையால் பந்தாடப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி!

மிழகம் முழுவதுமே பல அரசு அதிகாரிகள் சரியாக பணியைச் செய்யாமல் கவுன்சிலர் பதவியில் ஆரம்பித்து அனைவருக்குமே சலாம் போட்டு லஞ்சம் வாங்கிக் கொண்டு கடமையை காற்றில் பறக்க விடுகிறார்கள் என்கிற எண்ணம் பொதுமக்களிடையே இருந்து வருகிறது. இந்நிலையில், ஹரியானாவைச் சேர்ந்த சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா கடந்த 28 வருடங்களில், 53வது முறையாக, நேர்மையாக பணியாற்றியதற்கு பரிசாக இட மாறுதலுக்கு ஆளாகியிருக்கிறார். ஹரியானாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலராக பணியாற்றிய வந்த இவர் தற்போது தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அசோக் கெம்கா, நேற்று அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் விதிமுறைகள் மீண்டும் ஒரு முறை தகர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, 53-வது முறையாக நான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளேன். இதன்மூலம் பலர் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது எனக்குத் தெரியும்.

கடந்த 28 ஆண்டுகளாக நேர்மையாக இருந்ததற்கு கிடைத்த பரிசே இந்த பணியிட மாற்றம் என்று பதிவிட்டுள்ளார்.சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா சம்மந்தப்பட்ட சர்ச்சைக்குரிய நில ஒப்பந்தத்தை கடந்த 2012 ம் வருடம் ரத்து செய்தது இவர் தான். இதன் மூலமாக தான் இவர் ஆரம்பத்தல் பிரபலமடைந்தார். அதன் பின்னர், மத்தியிலோ, மாநிலத்திலோ எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இவருடைய நேர்மையான அணுகுமுறையினால் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு முறையும் இவரை பணியிட மாற்றம் செய்து பந்தாடி வருகிறார்கள்.

https://www.A1TamilNews.com

From around the web