4 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை! #Rajinikanth #2Point0Teaser

ரூ 542 கோடியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படம் உலகெங்கும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பி உள்ளது. இந்தியாவின் முதல் அதிக பட்ஜெட் பிரமாண்டப் படம் எனும் பெருமைக்குரிய 2.0-வின் முதல் டீசர் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. தியேட்டர்களில் 3டியில் இலவசமாக ரசிகர்களுக்குக் காட்டப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் டீசரைப் பார்க்க தியேட்டர்களில் காலையிலேயே குவிந்துவிட்டனர். அதே நேரத்தில் ஆன்லைனிலும் இந்தப் படம் வெளியானது. வெளியான சில நிமிடங்களில் அதிகப் பயனாளர்கள்
 

4 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை! #Rajinikanth #2Point0Teaser
ரூ 542 கோடியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படம் உலகெங்கும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பி உள்ளது. இந்தியாவின் முதல் அதிக பட்ஜெட் பிரமாண்டப் படம் எனும் பெருமைக்குரிய 2.0-வின் முதல் டீசர் இன்று காலை 9 மணிக்கு வெளியானது.

தியேட்டர்களில் 3டியில் இலவசமாக ரசிகர்களுக்குக் காட்டப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் டீசரைப் பார்க்க தியேட்டர்களில் காலையிலேயே குவிந்துவிட்டனர்.

அதே நேரத்தில் ஆன்லைனிலும் இந்தப் படம் வெளியானது. வெளியான சில நிமிடங்களில் அதிகப் பயனாளர்கள் காரணமாக யுட்யூப் சேனலே முடங்கிப் போனது. பின்னர் சில நிமிடங்களுக்குப் பிறகுதான் இயல்பு நிலை திரும்பியது.

டீசர் வெளியான 4 மணி நேரத்துக்குள் 3 மில்லியன் பார்வைகளைக் கடந்துவிட்டது 2.0 டீசர். தமிழ் திரையுலக வரலாற்றில் இது புதிய சாதனை ஆகும்.

தெலுங்கிலும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது 2.0 டீசர். இங்கு 2 மில்லியனுக்கும் அதிகமானோர் டீசரைப் பார்த்துள்ளனர்.

இந்தியில் வெளியான 2.0 டீசரை 1.8 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் சேர்த்து மொத்தம் 7 மில்லியனுக்கும் அதிகமானோர் 2.0 பட டீசரைக் கண்டு களித்துள்ளனர். இந்திய சினிமா சரித்திரத்தில் இது புதிய சாதனை ஆகும்.

மேலும் ட்விட்டர். பேஸ்புக் மற்றும் யுட்யூபில் உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது 2.0 டீசர்.

– வணக்கம் இந்தியா

From around the web