மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

ஸ்டாக்ஹோம்: மருத்துவத்திற்கான நோபல் பரிசு வில்லியம் ஜி கேலின், சர் பீட்டர் ரேட்கிளிப் மற்றும் கிரேக் செமன்ஸா ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் விருப்பப்படி தொடக்கத்தில் இருந்தே நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வரும் 5 துறைகளுள் ஒன்று மருத்துவம். மனித குலத்துக்கு பயன்படத்தக்க வகையிலான மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 1901ஆம் ஆண்டு முதல் 2018 வரை மொத்தம் 109 முறை மருத்துவத்துக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில்
 

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

ஸ்டாக்ஹோம்: மருத்துவத்திற்கான நோபல் பரிசு வில்லியம் ஜி கேலின், சர் பீட்டர் ரேட்கிளிப் மற்றும் கிரேக் செமன்ஸா ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் விருப்பப்படி தொடக்கத்தில் இருந்தே நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வரும் 5 துறைகளுள் ஒன்று மருத்துவம். மனித குலத்துக்கு பயன்படத்தக்க வகையிலான மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

1901ஆம் ஆண்டு முதல் 2018 வரை மொத்தம் 109 முறை மருத்துவத்துக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

செல்கள் குறித்த ஆய்வுக்காக நியூயார்க்கை சேர்ந்த வில்லியம் ஜி கேலின், கிரேக் செமன்ஸா ஆகியோருக்கும், பிரிட்டனை சேர்ந்த சர் பீட்டர் ரேட்கிளிப் என்பவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. வில்லியம் ஜி கேலின், பாஸ்டன் நகரில் Dana Farber என்ற புற்றுநோய் கழகத்தை அமைத்து ஆய்வை மேற்கொண்டார். மேலும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

இதேபோல் நியூயார்க்கில் பிறந்த கிரேக் செமன்ஸா, அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்திலுள்ள Johns Hopkins பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார்.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சர் பீட்டர் ரேட்கிளிப், கேம்ஃபிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார்.

உடலில் உள்ள செல்கள் ஆக்ஸிஜனின் அளவை எவ்வாறு உணர்ந்து கிரகித்து கொள்கின்றன என்பது பற்றிய ஆய்வுக்காகவும், செல்களின் வளர் சிதை மாற்றத்திற்கும், ஆக்ஸிஜன் அளவுக்குமான தொடர்பை கண்டறிந்ததற்காகவும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இந்த ஆய்வு இரத்தசோகை, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களின் சிகிச்சைக்கு பெரிதும் உதவும் எனக் கூறப்படுகிறது.

– வணக்கம் இந்தியா

From around the web