2019-20ம் ஆண்டுக்கான குருபெயர்ச்சி பலன்கள்…துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு!

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) இதுவரை 2ம் வீட்டில் சஞ்சரித்து வந்த குரு இப்போது 3மிடத்திற்க்கு அடியெடுத்து வைக்கிறது. 3ம் வீடு இடமாற்றத்தைக் கொடுக்கும். குடும்பத்தில் பாகப் பிரிவினை உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். வீடு, வாகனம் செலவினங்களைக் கொடுக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணம் ஏற்படும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத்
 

2019-20ம் ஆண்டுக்கான குருபெயர்ச்சி பலன்கள்…துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு!

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

இதுவரை 2ம் வீட்டில் சஞ்சரித்து வந்த குரு இப்போது 3மிடத்திற்க்கு அடியெடுத்து வைக்கிறது. 3ம் வீடு இடமாற்றத்தைக் கொடுக்கும். குடும்பத்தில் பாகப் பிரிவினை உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். வீடு, வாகனம் செலவினங்களைக் கொடுக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணம் ஏற்படும். 

எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் ஆகியவற்றில் நன்மை உண்டாகும். ஒப்பந்தங்காரர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். 

குருவின் பார்வை பலன்கள்

3மிடத்து குரு தனது 5ம் பார்வையால் 7மிடத்தைப் பார்க்கும். இதனால் திருமணம் நடைபெறும். பிரயாணம் உண்டாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்கும்.

குரு தனது 7மிடத்தைப் பார்க்கிறது. இதனால் அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் மனம் செல்லும். ஆன்மீகப் பயணம் உண்டாகும்.

குரு தனது 9ம் பார்வையால் 11மிடத்தைப் பார்க்கிறது. எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆசைகள் நிறைவேறும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். 

குரு சஞ்சரிக்கும் சாரப்பலன்கள்

குரு 4-1-2020 வரை கேதுவினுடைய நட்சத்திரமான மூலத்தில் சஞ்சரிக்கிறது. கேதுவுக்கு சொந்த வீடு இல்லாமையால் ஜாதகத்தில் கேது நன்மை தரும் வீடுகளில் அமர்ந்து இருந்தால் நன்மையான பலன்களைத் தரும். நன்மை தரும் வீடுகள் என்பது 1, 2, 3, 6, 10, 11 ஆகும்.

குரு பூராட நட்சத்திரத்தில் 7-3-2020 வரையிலும் அதன்பின் 20-7-2020 லிருந்து 30-10-2020 வரையிலும் சஞ்சரிக்கிறது. பூராடம் சுக்கிரனுடையது. சுக்கிரன் 1ம் வீடு மற்றும் 8ம் வீட்டின் அதிபதி ஆகும். மனக்குழப்பம் உண்டாகும். காரியத் தடைகள் உண்டாகும். உடல்நலம் பாதிக்கும். விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதினால் வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். 

29-3-2020 வரையிலும் அதன்பின் 30-10-2020லிருந்து 20-11-2020 வரையிலும் குரு சூரியனுடைய நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிக்கிறது. சூரியன் லாபாதிபதியாகையினால் பணவரவு தாராளமாக இருக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். 

குருவின் வக்ர கதியின் பலன்கள்

குரு 19-5-2020 முதல் 30-6-2020 வரை மகரத்தில் வக்ர கதியில் இருக்கிறது. இந்த சமயத்தில் உத்தியோகத்தில் குழப்பம் உண்டாகும். பிரயாணம் நன்மை தராது. இளைய சகோதரர்களினால் பிரச்சினை ஏற்படும். கடன்கள் தொல்லை தரும். 

30-6-2020 முதல் 14-9-2020 வரையில் தனுசு ராசியில் குரு வக்ரகதியில் இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களுடைய உதவி கிடைக்கும். 

பரிகாரம்: திருக்கடையூர் சென்று அன்னை அபிராமியை வழிபட்டால் சகல நன்மையும் வந்து சேரும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

இது வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்து வந்த குரு இப்போது குடும்பஸ்தனமாகிய 2மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. எனவே பணவசதி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும்.  வங்கியில் நிதிநிலை உயரும். 

எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். வாகன யோகம் உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக அமையும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும்.

குருவின் பார்வை பலன்கள்

2மிடத்திலிருக்கும் குரு தனது 5ம் பார்வையால் 6ம் வீட்டைப் பார்ப்பதினால் வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உடல்நலம் சிறிது பாதிக்கப்படும். கடனுதவி கிடைக்கும்.

குரு தனது 7ம் பார்வையால் 8ம் வீட்டைப் பார்ப்பதினால் உழைக்காத பணம் கிடைக்கும். இன்சுரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். மனச்சோர்வு உண்டாகும். லாபப் பங்கு கிடைக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். 

குரு தனது 9ம் பார்வையால் 10ம் வீட்டைப் பார்ப்பதினால் மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதத் துறையினருக்கு கௌரவ பட்டம் கிடைக்கும்.

குரு சஞ்சரிக்கும் சாரப்பலன்கள்

குரு 4-1-2020 வரை கேதுவினுடைய நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறது. கேதுவுக்கு சொந்த வீடு இல்லாமையால் அது இருக்கும் வீட்டைப் பொறுத்தே பலன்கள் தரும். ஜாதகத்தில் கேது 1,2, 3, 6, 10, 11ம் வீடுகளில் இருந்தால் நன்மையான பலன்களைத் தரும். 

குரு பூராட நட்சத்திரத்தில் 7-3-2020 வரையிலும் அதன்பின் 7-3-2020 முதல் 20-7-2020லிருந்து 30-10-2020 வரை சஞ்சரிக்கிறது. பூராடம் சுக்கிரனுடையதாகும். விருச்சிக ராசிக்கு சூரியன் 7,12க்குரியவன். ஆகையினால் திருமணம் நடைபெறும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். எதிரிகள் சரண் அடைவர். முதலீடுகள் நல்ல லாபம் தரும். வெளியூர் பயணம் ஏற்படும். 

29-3-2020லிருந்து 30-6-2020 வரையிலும் அதன்பின் 30-10-2020லிருந்து 20-11-2020 வரையிலும் சூரிய நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிக்கிறது. சூரியன் 10மிடத்து அதிபதி ஆவதினால், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். 

குருவின் வக்ர கதியின் பலன்கள்

குரு 15-5-2020 முதல் 30-6-2020 வரை மகர ராசியில் வக்ர கதியில் இருக்கிறது. இந்த சமயத்தில் இடமாற்றம் உண்டாகும். சில நஷ்டங்களைச் சந்திக்க நேரிடும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கல் உண்டாகும். 

30-6-2020 முதல் 14-9-2020 வரை குரு தனுசு ராசியில் வக்ரகதியில் இருப்பதினால் குழந்தைகளினால் பிரச்சினைகள் உண்டாகும். வரவேண்டிய பணம் தாமதமாகும். சினிமா, சங்கீதம் நஷ்டத்தில் இயங்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் ஒதுங்கிச் செல்வர். 

பரிகாரம்:  தேய்பிறை அஷ்டமி அன்று விரதமிருந்து கால பைரவரை பூஜித்து வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

இது வரை 12மிடமாகிய விரயஸ்தானத்தில் சஞ்சரித்த குரு 1மிடமாகிய ஜென்மராசியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. இதனால் இடமாற்றம் உண்டாகும். வீடு, நிலம், வாகனம் போன்றவற்றை விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கல்வியில் இடமாற்றம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் சிறப்பாக நடைபெறும். பயிர்த் தொழில் லாபம் தரும்.

வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். அடிக்கடி பிரயாணம் ஏற்படும். இடம், நிலம் ,வாகனம் இவற்றை விற்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். இல்லாவிடில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

குருவின் பார்வை பலன்கள்

குரு தனது 5ம் பார்வையால் 5ம் வீட்டைப் பார்க்கிறது. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதத்தில் முன்னேற்றம் ஏற்படும். பங்குச் சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் நன்மை தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். கேளிக்கைகள் நிறைந்து காணப்படும்.

குரு தனது 7ம் பார்வையால் 7ம் வீட்டைப் பார்க்கிறது. எனவே திருமணம் நடைபெறும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். எதிரிகளின் தொல்லைகள் மறையும்.

குரு தனது 9ம் பார்வையால் 9ம் வீட்டை பார்க்கிறது. இதனால் அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். தர்ம காரியங்களில் மனம் செல்லும். ஆன்மீகப் பிரயாணம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு புது ஒப்பந்தம் கிடைக்கும்.

குரு சஞ்சரிக்கும் சாரப்பலன்கள்

குரு 4-1-2020 வரை கேதுவினுடைய நட்சத்திரமான மூலத்தில் சஞ்சரிக்கிறது. கேதுவுக்கு சொந்த வீடு இல்லாமையால் ஜாதகத்தில் கேது எந்த வீடுகளில் அமர்ந்து இருக்கிறதோ அந்த பலன்களைத் தரும். கேது 1, 2, 3, 6, 10, 11ம் வீடுகளில் இருந்தால் நன்மையான பலன்களைத் தரும்.

குரு சுக்கிரனுடைய நட்சத்திரமான பூராட நட்சத்திரத்தில் 7-3-2020 வரையிலும் அதன்பின் 20-7-2020 லிருந்து 30-10-2020 வரையிலும் சஞ்சரிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் சுக்கிரன் 6ம் வீடு மற்றும் 11ம் வீட்டு அதிபதி ஆவதினால் வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். கடனுதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள் நிறைவேறும்.

குரு சூரியனுடைய நட்சத்திரமான உத்திராடத்தில் 29-3-2020 வரையிலும் அதன்பின் 30-10-2020லிருந்து 20-11-2020 வரையிலும் சஞ்சரிக்கிறது. இதனால் அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும்.

குருவின் வக்ர கதியின் பலன்கள்

குரு 15-5-2020 முதல் 30-6-2020 வரை மகர ராசியில் வக்ர கதியில் இருக்கிறது. இந்த சமயத்தில் குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகும். பணவரவு தாமதமாகும். பணம் கொடுக்கல் வாங்கல் சிக்கலில் போய் முடியும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். 

30-6-2020 முதல் 14-9-2020 வரை குரு தனுசு ராசியில் வக்ரகதியில் இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். பயிர்த் தொழில் பயன் தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். 

பரிகாரம்:  ஆலங்குடி அல்லது திட்டை சென்று குருவுக்கு பரிகாரம் செய்வது நன்மை தரும்.

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான குருபெயர்ச்சி பலன்கள் நாளை வெளிவரும்

முந்தைய ராசிகளுக்கான பலன்கள்:

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கான குருபெயர்ச்சி பலன்கள்

 
2019-20ம் ஆண்டுக்கான குருபெயர்ச்சி பலன்கள்…துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு!
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

 

From around the web