ஜூலை 12-ம் தேதி சீனாவில் 56000 அரங்குகளில் ரஜினியின் 2.0 வெளியீடு! #2Point0InChina

சென்னை: இந்திய சினிமா இதுவரை பார்த்திராத பிரமாண்ட படம் எனக் கொண்டாடப்பட்டது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0. இந்தப் படம் ரஜினி – ஷங்கர் கூட்டணியில் இதற்கு முன் வந்து வெற்றிப் பெற்ற எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம். இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் 29 ம் தேதி இந்தப் படம் வெளியானது. 3டியில் வெளியான இந்தப் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. வட இந்தியாவில் ரூ 250 கோடிக்கும் மேல் குவித்து சாதனைப்
 

சென்னை: இந்திய சினிமா இதுவரை பார்த்திராத பிரமாண்ட படம் எனக் கொண்டாடப்பட்டது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0. இந்தப் படம் ரஜினி – ஷங்கர் கூட்டணியில் இதற்கு முன் வந்து வெற்றிப் பெற்ற எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம்.

இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் 29 ம் தேதி இந்தப் படம் வெளியானது. 3டியில் வெளியான இந்தப் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. வட இந்தியாவில் ரூ 250 கோடிக்கும் மேல் குவித்து சாதனைப் படைத்தது 2.0வின் இந்திப் பதிப்பு. மொத்தம் ரூ 1000 கோடிகளுக்கும் மேல் இந்தப் படம் வசூலித்தது.

இந்க நிலையில் 2.0 படத்தை சீனாவில் வெளியிடும் வேலைகளில் இறங்கியது லைகா நிறுவனம். இப்போது வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி வரும் ஜூலை 12-ம் தேதி சீனா முழுவதும் 56000 அரங்குகளில் 2.0 படம் வெளியாகவிருக்கிறது. இத்தனை அரங்குகளில் வெளியாகும் முதல் இந்தியப் படம் 2.0தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

– வணக்கம் இந்தியா

From around the web