இன்று +1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன!

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை 16ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை 96.04 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக தேர்ச்சி அடைந்துள்ள மாவட்டங்களில் கோவை 98.10 % முதலிடத்தில் உள்ளது. விருதுநகர் மாவட்டம் 97.90 % 2வது இடத்திலும், 97.51%. தேர்ச்சி பெற்று கரூர் 3வது இடத்திலும், 88.68% தேர்ச்சியுடன் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்திலும்
 

இன்று +1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன!மிழகத்தில் +2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை 16ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை 96.04 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக தேர்ச்சி அடைந்துள்ள மாவட்டங்களில் கோவை 98.10 % முதலிடத்தில் உள்ளது. விருதுநகர் மாவட்டம் 97.90 % 2வது இடத்திலும், 97.51%. தேர்ச்சி பெற்று கரூர் 3வது இடத்திலும், 88.68% தேர்ச்சியுடன் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்திலும் உள்ளன.

தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 2716 பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்வு முடிவுகளை செல்போனில் குறுஞ்செய்தி வாயிலாகவும், www.tnresults.nic.in, https://dge1.tn.nic.in/ , https://dge2.tn.nic.in/ ஆகிய இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web