அதிர்ச்சி! பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் திடீர் மரணம்!!

 
Darshan darmaraj
பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் இன்று காலமானார். அவருக்கு வயது 41.
.
2008-ம் ஆண்டு சிட்னி சந்திரசேகர இயக்கத்தில் வெளியான சிங்கள சின்னத்திரை நாடகமான 'ஏ9' மூலம் தர்ஷன் தர்மராஜ் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2008-ல் வெளியான 'பிரபாகரன்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
Darshan dharmaraj
இவரது முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இப்படத்தில் படத்தில் அவர் தமிழீன விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கேரக்டரில் நடித்தார்.
அதன் பின்னர் மச்சாங், இனிவான், மாதா, சுனாமி மற்றும் கோமாலி கிங்ஸ் உள்ளிட்ட பல சிங்கள மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். எதார்த்தமான நடிப்புத் திறமைகள் நிறைந்த நடிகராக விமர்சகர்களால் தொடர்ந்து பாராட்டப்பட்டார்.
Darshan dharmaraj
இந்நிலையில் தர்ஷன் தர்மராஜுக்கு இன்று திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

From around the web