பென்சில் பட இயக்குநர் மணி நாகராஜ் திடீர் மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி

 
Mani-Nagaraj

‘பென்சில்’ படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 46.

பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மணி நாகராஜ். கடந்த 2016-ம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பென்சில் என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் வெளியாவதற்கு சில ஆண்டுகள் ஆனாலும், விமர்சன ரீதியில் வெற்றி அடைந்தது. இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ஊர்வசி, விடிவி கணேஷ், டிபி கஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Mani-Nagaraj

இதனைத் தொடர்ந்து வாசுவின் கர்ப்பிணிகள் படத்தை இயக்கி வந்தார். இதில் நீயா நானா கோபிநாத், அனிகா சுரேந்திரன், வனிதா விஜயகுதார், சீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த ஜூலை 7-ம் தேதியன்று இப்படத்தின் ஃப்ரஸ்ட் லுக்கை நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அடுத்த ஆண்டு இப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

RIP

இந்நிலையில், இன்று மதியம் அவருக்கு திடீரென நெஞ்சுவல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மணி நாகராஜ் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மணி நாகராஜ் திருச்சியை சேந்தவர், அவருக்கு 46 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் இயக்குநரான மணி நாகராஜின் திடீர் மரணம் திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web