‘மீண்டும் மீண்டும் மனு தாக்கலா?.. அபராதம் விதிப்போம்’ – ஸ்டெர்லைட் வேதாந்தாவை எச்சரித்த உச்சநீதிமன்றம்!

டெல்லி: மீண்டும் மீண்டும் மனு தாக்கல் செய்தால் அபராதம் விதிப்போம் என்று ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமத்திற்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. தமிழக அரசு ஆலையைத் திறக்க அனுமதி தரவேண்டும் என்றும் கூறியிருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
 

டெல்லி: மீண்டும் மீண்டும் மனு தாக்கல் செய்தால் அபராதம் விதிப்போம் என்று ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமத்திற்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. தமிழக அரசு ஆலையைத் திறக்க அனுமதி தரவேண்டும் என்றும் கூறியிருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நடத்திய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தார்கள். மேலும், மீண்டும் மீண்டும் இப்படி மனு தாக்கல் செய்தால் அபராதம் விதிப்போம் என்று எச்சரித்துள்ளார்கள்.

13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, தூத்துக்குடியில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் சட்டமன்றத்தில் கொள்கை முடிவாகத் தீர்மானம் இயற்றி நிரந்தரமாக மூடுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி பிரச்சாரத்தில் பேசியிருந்தார்.

– வணக்கம் இந்தியா

From around the web