‘ஆடல் பாடல் எல்லாம் வேண்டாம்…  ஏரியை தூர் வாருவோம்’- அசத்திய தமிழ்நாட்டின் முன் மாதிரி கிராமம்!

பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியின் அருகில் உள்ள நாடியம் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் இளைஞர்கள், அவர்கள் நடத்தும் ஆடல் பாடல் நடனம் நிகழ்ச்சியை கைவிட்டு அதற்குச் செலவிடும் பணத்தை, 3 ஏரிகளை தூர் வாருவதற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நடவடிக்கை விவசாயத்திற்கான நீரை பாதுகாக்கவும் நிலத்தடி நீரை உயர்த்த உதவும். ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த நிலங்கள் இப்பொழுது சரியான பாசனம் இன்மை மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயிகளை விவசாய நிலத்தை பலகாலம் மேம்படுத்த முடியாத
 
‘ஆடல் பாடல் எல்லாம் வேண்டாம்…  ஏரியை தூர் வாருவோம்’- அசத்திய தமிழ்நாட்டின் முன் மாதிரி கிராமம்!
பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியின் அருகில் உள்ள நாடியம் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர்கள்  மற்றும் இளைஞர்கள், அவர்கள் நடத்தும் ஆடல் பாடல் நடனம் நிகழ்ச்சியை கைவிட்டு அதற்குச் செலவிடும் பணத்தை,  3 ஏரிகளை தூர் வாருவதற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நடவடிக்கை விவசாயத்திற்கான நீரை பாதுகாக்கவும் நிலத்தடி நீரை உயர்த்த உதவும். ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த நிலங்கள் இப்பொழுது சரியான பாசனம் இன்மை மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயிகளை விவசாய நிலத்தை பலகாலம் மேம்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளியுள்ளது.
  
டெல்டா பகுதிகளில் 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடும் காவிரி வற்றியதால், விவசாயிகள் பருவமழையை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது டெல்டா பகுதியை குறுகச் செய்து உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். கிராமத்தார் வறட்சியை சந்திக்கு முன்பதாக பஞ்சாயத்து தலைவர்கள் நீர்நிலைகளை பராமரிப்பதற்கு முன்வந்துள்ளனர். நாடியம் கிராமத்தை சேர்ந்த ஜி நீலகண்டன், கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வனும் இந்த பணிக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
  
பேராவூரணியில் உள்ள 366 ஏக்கர் பரப்பளவுள்ள பெரியகுளம் ஏரி தூர்வாரும் பணியை முன்னெடுத்துள்ள மக்கள் நமது முன்மாதிரி என்று சென்னையிலுள்ள சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உயரதிகாரி நீலகண்டன் தெரிவித்தார். கிராமத் தலைவர்கள் மற்றும் இளைஞர்களை சந்தித்து நீர்நிலைகள் மற்றும் ஏரி, குளம், நீர் வரத்துகளை உயிர்ப்பிக்கும் வழிகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் நீலகண்டன் கூறினார்.நிதி திரட்டுவது ஒரு மிகப்பெரிய பணி.  ஒவ்வொரு குடும்பத்திடமும் பணம் பிரிப்பது பற்றிய பேச்சு வார்த்தையின் போது,  கோவில் திருவிழாக்களின் போது நடன நிகழ்ச்சி நடத்துவதில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்து அதில் மிச்சமாகும் பணத்தை இந்த முயற்சிக்கு செலவிட முன்வந்தனர். இந்த நடன விழாக்கள் ஒவ்வொரு வருடமும் 3 அல்லது 4 முறை நடைபெறும், அதற்கு 2 முதல் 3 லட்சம் வரை செலவாகும். இதை ரத்து செய்வதன் மூலம் ,மேலும் 10 முதல் 12 லட்சம் வரை சேமிக்கலாம். அதை நீர்நிலைகளை மேம்படுத்தவும் ஏரிகளை தூர்வாரவும் பயன்படுத்தலாம் என்று முடிவு  செய்துள்ளனர்.ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்து நீர் நிலைகளை தூர்வார அந்தப் பணத்தை செலவிட முன் வந்துள்ள நாடியம் கிராமம் உண்மையிலேயே ஒரு முன்மாதிரி கிராமம் தான்!
 
 

From around the web