காணாமல் போன அர்ஜென்டினா நீர்மூழ்கிக் கப்பல்.. வெடிவிபத்துக்கு உள்ளானதாக தகவல்!

புவெனஸ் அய்ரஸ்: அர்ஜென்டினா போர்ப்படை நீர்மூழ்கிக் கப்பல் கடந்த நவம்பர் 15ம் தேதி முதல் காணாமல் போனது. தென் துருவமாமான உசுவாய்யா விலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல், வடக்கே மர் தெல் ப்ளாட்டா துறைமுகத்தை நோக்கிச் சென்றது. மாலுமிகள் உட்பட 44 பேர் இருந்தனர். கடைசியாக தென்பட்ட அர்ர சான் யுவான் பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாக தற்போது தகவல்கள் வந்துள்ளன. வெடிச்சத்தம் கேட்பதற்கு 10 மணி நேரத்திற்கு முன்னதாக் பேட்டரி ஷார்ட் சர்க்யூட் பற்றி தகவல் வந்ததாம்.
 

காணாமல் போன அர்ஜென்டினா நீர்மூழ்கிக் கப்பல்.. வெடிவிபத்துக்கு உள்ளானதாக தகவல்!

புவெனஸ் அய்ரஸ்: அர்ஜென்டினா போர்ப்படை நீர்மூழ்கிக் கப்பல் கடந்த நவம்பர் 15ம் தேதி முதல் காணாமல் போனது. தென் துருவமாமான உசுவாய்யா விலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல், வடக்கே மர் தெல் ப்ளாட்டா துறைமுகத்தை நோக்கிச் சென்றது. மாலுமிகள் உட்பட 44 பேர் இருந்தனர். கடைசியாக தென்பட்ட அர்ர சான் யுவான் பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாக தற்போது தகவல்கள் வந்துள்ளன.

வெடிச்சத்தம் கேட்பதற்கு 10 மணி நேரத்திற்கு முன்னதாக் பேட்டரி ஷார்ட் சர்க்யூட் பற்றி தகவல் வந்ததாம். இந்தக் நீர்மூழ்கிக் கப்பல் பழுது பார்க்கப்பட்டதிலும் பல குறைபாடுகள் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாற்றம் செய்யப்பட்ட உதிரிப்பாகங்கள் தரம் வாய்ந்தது இல்லையாம். அதிகமான காலம் எடுத்துக் கொள்ளப்பட்டதாம். இரண்டு வருடங்களில் முடியவேண்டிய பழுதுபார்க்கும் பணி 5 வருடங்கள் வரை நீடித்ததாக கூறப்படுகிறது

காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலை 28 கப்பல்கள், 11 விமானங்களை அமெரிக்கா, இங்கிலாந்து,ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அனுப்பியிருந்தன. இறுதியாக, கப்பல் விபத்துக்குள்ளாகி விட்டது. பயணம் செய்த 44 பேரும் உயிரிழந்து விட்டார்கள் என்று ராணுவ அமைச்சர் அறிவித்துள்ளார்.

நீர்மூழ்கிக் கப்பலே காணாமல் போனது அமெரிக்கப் பிராந்தியத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web