சென்னையில் கமலா ஹாரிஸ்! அமெரிக்காவில் வைரலாகும் புகைப்படம்!!

சென்னையில் தன்னுடைய தாத்தா – பாட்டியுடன் இருக்கும் இளவயது கமலா ஹாரிஸின் புகைப்படம் அமெரிக்காவில் வைரலாகி வருகிறது. துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டவுடன், விசாவில் இருப்பவர்கள் உள்பட ஏராளமான அமெரிக்க இந்தியர்கள் கமலா ஹாரிஸின் சென்னை தொடர்பு மற்றும் அவருடைய குடும்ப உறவுகள் பற்றி சமூகத் தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். கமலா, தன்னுடைய தாயார் மற்றும் தங்கை மகளுடன் சென்னைக்குச் சென்றிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் மிகவும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. க்ராப்
 

சென்னையில் கமலா ஹாரிஸ்! அமெரிக்காவில் வைரலாகும் புகைப்படம்!!சென்னையில் தன்னுடைய தாத்தா – பாட்டியுடன் இருக்கும் இளவயது கமலா ஹாரிஸின் புகைப்படம் அமெரிக்காவில் வைரலாகி வருகிறது.

துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டவுடன், விசாவில் இருப்பவர்கள் உள்பட ஏராளமான அமெரிக்க இந்தியர்கள் கமலா ஹாரிஸின் சென்னை தொடர்பு மற்றும் அவருடைய குடும்ப உறவுகள் பற்றி சமூகத் தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

கமலா, தன்னுடைய தாயார் மற்றும் தங்கை மகளுடன் சென்னைக்குச் சென்றிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் மிகவும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. க்ராப் தலையுடன் சேலை உடுத்தியிருக்கும் இளவயது கமலா ஹாரிஸை பார்ப்பதற்கு அச்சு அசல் தமிழ்ப் பெண் போலவே காட்சியளிக்கிறார்.

கமலாவின் தாயார் சியாமளா கோபாலன் அமெரிக்காவில் பிரபல மார்பகப் புற்று நோய்க்கான மருத்துவ ஆராய்ச்சியாளர். கமலாவின் தாத்தா கோபாலன் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகி ஆவார். பொது வாழ்க்கைக்கு வருவதற்கு தாத்தா தான் தனது ரோல் மாடல் என்று கமலா ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

A1TamilNews.com

From around the web