கொரோனா காலத்திலும் கண்டிப்பாக நடக்கனும் கிராமசபை கூட்டம்!

சிறப்பு கிராமசபை கூட்டம் ஒவ்வொரு ஆணடும் குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 4 சிறப்பு நாட்களை முன்னிட்டு ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 , அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடத்தப்பட வேண்டும். பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் படி ஆட்சிகள் மாறினாலும், இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றியவர் முன்னாள் பிரதமர் அமரர் ராஜிவ் காந்தி. காந்திஜியின் கிராமராஜ்யம் கனவு நிறைவேற பஞ்சாயத்துராஜ் சட்டம் அறிமுகம் ஆனது. கிராமங்களின் தேவை, நிறைவேற்றப்படவேண்டிய நலத்திட்டங்களை
 

கொரோனா காலத்திலும் கண்டிப்பாக நடக்கனும் கிராமசபை கூட்டம்!சிறப்பு கிராமசபை கூட்டம் ஒவ்வொரு ஆணடும் குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 4 சிறப்பு நாட்களை முன்னிட்டு ஜனவரி 26,  மே 1,  ஆகஸ்ட் 15 ,  அக்டோபர்  2  ஆகிய தேதிகளில் நடத்தப்பட வேண்டும்.

பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் படி ஆட்சிகள் மாறினாலும், இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றியவர் முன்னாள் பிரதமர் அமரர் ராஜிவ் காந்தி. காந்திஜியின் கிராமராஜ்யம் கனவு நிறைவேற பஞ்சாயத்துராஜ் சட்டம் அறிமுகம் ஆனது. கிராமங்களின் தேவை, நிறைவேற்றப்படவேண்டிய நலத்திட்டங்களை கிராமசபை முடிவு செய்யலாம்.

ஆனால், மாநிலஅரசு கிராமசபை கூட்டம் நடத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. கொரோனாஊரடக்கு காரணமான வேலை இழப்பு,வேளாண் சந்தை,கிராம வளர்ச்சி பணிகள் பற்றி விவாதிக்க ஆக.15 கிராமசபை கூட்டம் அவசியம் ஆகும்.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த கிராமசபை கூட்டங்களில்  ஹைட்ரோகார்பன்  திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  சேலம் மாவட்ட கிராமசபைகள், சேலம் சென்னை 8 வழிசாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றின.  இப்போது தேசிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வறிக்கை  மீது தீர்மானம் நிறைவேற்ற கிராமசபைகள் காத்திருக்கின்றன.

எனவே கொரோனாவை காரணம் காட்டி கிராமசபை கூட்டங்களை  அரசு ஒத்தி வைக்கக் கூடும். தமிழ்நாட்டில்  12 ஆயிரத்து  524  கிராமப்பஞ்சாயத்துகள் உள்ளன. 1950 களில் கிராமப்பஞ்சாயத்து  கூட்டுறவு சங்கங்கள்  தான் காங்கிரஸ் பலத்தின் அஸ்திவாரங்கள். கிராம அமைப்புகளில் கவனத்தை தொலைத்த காங்கிரஸ், விவசாயிகளின் ஆதரவை இழந்தது.

இப்போதாவது காங்கிரஸ் தனது கவனத்தை கிராமங்கள் பக்கம் திருப்பவேண்டும். பஞ்சாயத்துராஜ் சட்டம் இயற்றிய காங்கிரஸ் கட்சி தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்களை நடத்த வற்புறுத்தி  அதில் கலந்துகொள்ளவேண்டும். கிராம மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து அதற்கான நிவாரணப்பணிகளை கிராமசபைகளில் முன்மொழியவேண்டும்.

தமிழகத்தில் காங்கிரசுக்கு  புத்துயிரூட்ட கிராமசபை கூட்டங்கள் அற்புதமான வாய்ப்பு.  கமல்ஹாசன், ரஜினி  ரசிகர்கள் கூட கிராமசபை கூட்டம் மீது கவனம் செலுத்துகிறார்கள். 

தி.மு.க. விற்கு எதிரான கூட்டணிக்கு தலைமை தாங்கப்போவதாக சொல்லி  சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுக்கும் பா.ஜ.க. திடீர் தலைவர்கள் கிராமசபை கூட்டம் பற்றி கிராம மக்களிடையே  விழிப்புணர்வு உண்டாக்கட்டும். பிறகு கூட்டணி தலைமை பற்றி சவடால் அடிக்கட்டும்

– வி.எச்.கே. ஹரிஹரன் 

A1TamilNews.com

From around the web